Sunday, November 29, 2020

sri kamakshi Ambal temple kanchipuram. ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம்

இன்று கார்த்திகை தீபம் காமாட்சி அம்மன் சன்னதியில் 
Today sri kanchi kamakshi Ambal temple karthikai deepam utsavam 

Friday, November 27, 2020

sri kamakshi Ambal Devasthanam

கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை தங்கரதம்  உற்சவம் 

Tuesday, November 24, 2020

ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன்

மாயை அகற்றி ஞானம் அருளும் காஞ்சி காமாட்சி! 

தேவியின்  51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று.

 கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். 

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

 பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.
அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ ‘ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். 
மகா பெரியவா தம்முடைய அருளுரையில், 'மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம் என்று அருளி உள்ளார்.

Tuesday, November 17, 2020

kanchi kamakshi Temple Kanchipuram www.kanchikamakshi.com

நேற்று மாலை கார்த்திகை மாதம் முதல் தேதி  காமாக்ஷி அம்மன் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது 

Saturday, November 14, 2020

hindi version about kamakshi amman Temple

https://www.bhaskar.com/national/news/kamakshi-darshan-of-shaktarupi-laxmi-in-one-eye-of-mother-and-saraswati-in-other-127914456.html?utm_campaign=127914456&utm_medium=sharing&_branch_match_id=856065952730598514

Friday, November 13, 2020

ஸ்ரீ காஞ்சிபுரம் காமாக்ஷி temple

Auspicious day of Deepavali at (Deepavali mandapam ) sri kamakshi Ambal temple  kanchipuram 
 தீபாவளி விஷேச பூஜை இடம் ஸ்ரீ காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் தீபாவளி மண்டபம் 
www.kanchikamakshi.com

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday, November 12, 2020

தீபாவளி திருநாள்ஸ்ரீ காஞ்சிபுரம் சிவாலயங்களில் தீபாவளி பண்டிகை

தீபாவளியை முன்னிட்டு அதிகாலை காஞ்சிபுரம் சிவாசார்யர்கள் சுமார் 30 பேர் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புரத்திலுள்ள நூற்றெண்பதுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்களுக்குச்சென்று தைலம், கங்காஜலம், மற்றும் மற்ற விசேஷ த்ரவ்யங்களினால் அபிஷேகம் செய்து, புது வஸ்த்ரம் சாற்றி ஸ்வாமிக்கு இனிப்பு மற்றும் பக்ஷணங்கள் நிவேதனம் செய்து மஹாதீபாராதனை காண்பித்து தரிசனத்திற்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அதை ப்ரசாதமாக வினியோகிப்பர்.

இந்த தீபாவளி கைங்கர்யம் கடந்த 33 வருடங்களாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆக்ஞைப்படி விசேஷமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தீபாவளி பூஜை நடத்தப்படும் கோவில்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(சர்வ தீர்த்தம் துவாதச லிங்கங்கள்)
1. ஸ்ரீ கங்காதீஸ்வரர் ( கீழ்க்கரை)
2. ஸ்ரீ அனுமந்தீஸ்வரர்
3. ஸ்ரீ யோகேஸ்வரர்
4. ஸ்ரீ ராமேஸ்வரர் ( தென்கரை)
5. ஸ்ரீ சீத்தேஸ்வரர்
6. ஸ்ரீ லக்ஷ்மணேஸ்வரர்
7. ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர்
8. ஸ்ரீ தீர்த்தேஸ்வரர்( மேல்கரை)
9. ஸ்ரீ இரண்யேஸ்வரர்
10. ஸ்ரீ காமேஸ்வரர்
11. ஸ்ரீ காசி விஸ்வநாதர்
12. ஸ்ரீ தவளேஸ்வரர்( வடகரை)
( வெள்ளை குளம்)
 
13. ஸ்ரீ சந்திரசேகரேஸ்வரர்
 
( ஒலிமுகமதுபேட்டை)
 
14. ஸ்ரீ வானேஸ்வரர்
 
( அம்பி கிராமம்)
15. அம்பிகாவனேஸ்வரர்
16. ஸ்ரீ ஈசானேஸ்வரர்
 
( அரக்கோணம் சாலை)
17. ஸ்ரீ சுக்கிலேஸ்வரர்
 
( ஓணகாந்தன் தளிவளாகம் , பஞ்சுப்பேட்டை)
18. ஸ்ரீ ஒணேஸ்வரர்
19. ஸ்ரீ காந்தேஸ்வர்
20. ஸ்ரீ ஜலந்தரேஸ்வரர்
21. ஸ்ரீ நந்தீஸ்வரர் ( பசவேஸ்வரர்)
 
( பருத்திக்குளம்)
22. ஸ்ரீ பரிதீஸ்வரர்
23.ஸ்ரீ செவ்வந்தீஸ்வரர் ( விதைப்பண்ணை வளாகம் )
 
( லிங்கப்பய்யர் தெரு)
24. ஸ்ரீ அனந்த பத்மநாபேஸ்வரர்
 
(ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகம்)
25. ஸ்ரீ திருவேகம்பம்( தழுவக்குழைந்த நாதர்)
26. ஸ்ரீ பிரளயம் காத்தீஸ்வரர்
27. ஸ்ரீ வெள்ளக்கம்பர்
28. ஸ்ரீ கள்ளக்கம்பர்
29. ஸ்ரீ ஸ்ரீ மத்தள மாதேஸ்வரர்
30. ஸ்ரீ மார்க்கண்டேஸ்வரர்
31. ஸ்ரீ நல்லக்கம்பர்
32. ஸ்ரீ அகத்தீஸ்வரர்
33. ஸ்ரீ இடபேஸ்வரர்
34. ஸ்ரீ கச்சிமயானர்
35. ஸ்ரீ வாலீஸ்வரர்
36. ஸ்ரீ லிங்கபேஸ்வரர்
37. ஸ்ரீ விண்டுவிச்சேஸ்வரர்
( ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெரு)
38. ஸ்ரீ இராமநாதீஸ்வரர்
39. ஸ்ரீ சுரகரேஸ்வரர்
40. ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்
( தொண்டை மண்டல ஆதீனம்)
41. ஸ்ரீ மெய்கண்டீஸ்வரர்
( ஒக்கப் பிறந்தான் குளம் தெரு)
42. ஸ்ரீ காஞ்சிபுரீஸ்வரர்
43. ஸ்ரீ செளனகேஸ்வரர்
( ஒக்கப் பிறந்தான் குளக்கரை)
44. ஸ்ரீ அரம்பெயரேஸ்வரர்
45. ஸ்ரீ வன்னீஸ்வரர்
( மாண்டுகன்னீஸ்வரர் தெரு)
46. ஸ்ரீமாண்டுகன்னீஸ்வரர்
( நாராயண ஆஸ்ரமம்)
47. ஸ்ரீ மண்டலேசர்
( ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் வளாகம்)
48. ஸ்ரீ கச்சபேஸ்வரர்
49. ஸ்ரீ தர்ம சித்தீஸ்வரர்
50. ஸ்ரீ யோகசித்தீவரர்
51. ஸ்ரீ ஞானசித்தீவரர்
52. ஸ்ரீ வேத சித்தீஸ்வரர்( லிங்கத்திற்கு நான்கு முகங்கள்)
53. ஸ்ரீ யுகசித்தீஸ்வரர்
54. ஸ்ரீ மார்க்கண்டேஸ்வரர்
55. ஸ்ரீ லிங்கபேஸ்வரர்
56. ஜலகண்டீஸ்வரர்
57. இட்டசித்தீஸ்வரர்
( நெல்லுக்கார தெரு)
58. அரிசாபபயந்தீஸ்வரர்
( பேருந்து நிலையம்)
59. ஸ்ரீ திரிகால ஞானேஸ்வரர்
( உலகளந்தார் சன்னதி தெரு)
60. ஸ்ரீ அபிராமேஸ்வரர்
( ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்)
61. ஸ்ரீ காசி விஸ்வநாதர்
62. ஸ்ரீ கௌசிகேஸ்வரர்
( ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் ஆலயம்)
63. ஸ்ரீ சக்தீஸ்வரர்
64. ஸ்ரீ மகாகாளேஸ்வரர்
( செங்கழு நீரோடை தெரு)
65. ஸ்ரீ கண்ணேஸ்வரர்
( மேற்கு ராஜ வீதி)
66. ஸ்ரீ ஐராவதேஸ்வரர்
67. ஸ்ரீ அமரேஸ்வரர்
68. ஸ்ரீ மாசாத்தான் தளி
( குமரக்கோட்டம்)
69. ஸ்ரீ சேனாபதீஈஸ்வரர்
( சங்கரமடம்)
70. ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்
 
( கங்கைகொண்டான் மண்டபம் பின்புறம்)
71. ஸ்ரீ மங்களேஸ்வரர்
( செங்கழுநீர் ஓடை தெரு( தர்கா பின்புறம்)
72. ஸ்ரீ மாதலீஸ்வரர்
( கம்மாள தெரு)
73. ஸ்ரீ கடகேசம்
74. ஸ்ரீ கங்கனேசம்
75. ஸ்ரீ பிறவாத்தானீஸ்வரர்
76. ஸ்ரீ முத்தீஸ்வரர்
77. ஸ்ரீ இறவாத்தானீஸ்வரர்
( கோனேரிக்குப்பம்)
78. ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர்
( ஏனாத்தூர்)
79. ஸ்ரீ மகாகாளீஸ்வரர்
80. ஸ்ரீ இறங்குமட்டிஸ்வரர்
( அப்பாராவ் தெரு)
81. ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்
82. ஸ்ரீ அருணாசலேஸ்வரர்
83. ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
( தாமல் வார் தெரு)
84. 85. 86. 87.
பாண்டவேஸ்வரர் (பாண்டவர்கள் வழிபட்டது) தாமல்வார் நெருக்கடியில் மல்லிகைத்தோட்டத் தெரு ஓரத்தில் ஒன்றும்,தோட்டத்தில் ஒன்றும், இரயில் நிலையத்தில் இரண்டும் ஆக நான்கும் உள்ளன. 
(கிழக்கு ராஜ வீதி)
88. சூரிஸ்வரர்
89. ஸ்ரீ பூதநாதீஸ்வரர்
90. ஸ்ரீ சிற்பீஸ்வரர்
91. ஸ்ரீ மச்சேஸ்வரர்
92. ஸ்ரீ நகரீஸ்வரர்
 
( சி .எஸ் .ஐ. மருத்துவமனை எதிரில்)
93. ஸ்ரீ மதங்கீஸ்வரர்
( காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெரு)
94. ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர்
( ரயில் நிலைய மயான பூமி)
95. ஸ்ரீ சிகண்டீஸ்வரர்
( பரஞ்சோதி அம்மன் திருக்கோயில்)
96. ஸ்ரீ தர்மேஸ்வரர்
( திருக்காலிமேடு)
97. ஸ்ரீ உரோமரேஸ்வரர்
98. ஸ்ரீ சோமேஸ்வரர்
99. ஸ்ரீ சக்திய நாதீஸ்வரர்( திருக்கச்சி நெறி காரைக்காடு)
( தேனம்பாக்கம்)
100. ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்( லிங்கபேஸ்வரர்)
101. ஸ்ரீ பாடலீஸ்வரர்
102. ஸ்ரீ சிவாஸ்தானம்
103. ஸ்ரீ கங்காதரேஸ்வரர்
( ஆதிசங்கரர் நகர்)
104. ஸ்ரீதேவராஜேஸ்வரர்
( ஸ்ரீ புண்ணியகோட்டீஸ்வரர் தெரு)
105. ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர்
(சதாவரம்)
106. ஸ்ரீ வேதவனீஸ்வரர்
( திருக்கச்சி நம்பி தெரு)
107. ஸ்ரீ மணிகண்டீஸ்வரர்
( திருவள்ளுவர் தெரு)
108. ஸ்ரீ பணாமணீஸ்வரர்
( சாந்தாலீஸ்வரர் திருக்கோயில்( நாகலூத்து மேடு)
109. ஸ்ரீ சாந்தாலீஸ்வரர்
110. ஸ்ரீ வசிட்டேசர்
111. ஸ்ரீ ஆங்கிரேஸ்வரர்
( பச்சையம்மன் மகளிர் கல்லூரி வளாகம்)
112. ஸ்ரீ அத்தீரீசர்
113. ஸ்ரீ குச்சேஸ்வரர்
( கண்ணப்பன் தெரு)
114. ஸ்ரீ காசிபேஸ்வரர்
( கோட்டா ராம் பாளையம் தெரு)
115. ஸ்ரீ இராமேஸ்வரர்
116. ஸ்ரீ லட்சுமணேஸ்வரர்
( ஸ்ரீ தும்பவனம் தெரு )
117. ஸ்ரீ பாகீஸ்வரர்( பாக்கவேசம்)
118. ஸ்ரீ பிரம்மனேஸ்வரர்
( உத்தரமேரூர் சாலை)
119. ஸ்ரீ கௌதமேஸ்வரர்
( ஆலடி பிள்ளையார் கோயில் தெரு)
120. ஸ்ரீ பணாமுடீஸ்வரர்
121. ஸ்ரீ சித்தீசர்
122. ஸ்ரீ ஆதிபேசர்
 
( மேட்டுத்தெரு பேருந்து நிலையம்)
123. ஸ்ரீநகரீஸ்வரர்
( அறம்வளர்த்த ஈஸ்வரன் கோவில் தெரு)
124. ஸ்ரீ அறம்வளர்த்தீஸ்வரர்
125. ஸ்ரீ விருபாட்சீஸ்வரர்
( இராஜாஜி மார்க்கெட்)
126, ஸ்ரீ சக்தீசர்
( ஆடிசன் பேட்டை)
127. ஸ்ரீ வன்னீசர்
128. ஸ்ரீ முத்தீஸ்வரர்
129. ஸ்ரீ கருடேஸ்வரர்
130. ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர்
131. ஸ்ரீ பராசரேஸ்வரர்
 
( ஸ்ரீ காமராஜர் தெரு)
132. ஸ்ரீ சித்தீஸ்வரர்
( ஸ்ரீ சேக்குப்பேட்டை பி.எஸ்.கே தெரு)
133. ஸ்ரீ பகிரதீஸ்வரர்
( கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோவில்
134. ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
135. ஸ்ரீ திரிலோகநாதர்
( பிள்ளையார்பாளையம் முடங்கு வீதி)
136. ஸ்ரீ கணிகண்டீஸ்வரர்
137. ஸ்ரீ எமதருமேஸ்வரர்
138. ஸ்ரீ காயாரோகணீஸ்வரர்
139. ஸ்ரீ லிங்கேஸ்வரர்
( திருவாவடுதுறை ஆதீன கிளை மடம்)
140. ஸ்ரீ ஏகாம்பரநாதர்
( புதுப்பாளையம் தெரு)
141. ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்
142. ஸ்ரீ உருத்திரகோட்டீஸ்வரர்
( கிருஷ்ணன் தெரு தென் கோடி)
143. ஸ்ரீ முத்தீஸ்வரர்
144. ஸ்ரீ வன்னீஸ்வரர்
( சி .எஸ். எம் தோப்பு)
145. ஸ்ரீ வேகவதீஸ்வரர்
( சேர்மன் சாமிநாத முதலித் தெரு)
146. ஸ்ரீ ஆனந்த ருத்ரேஸ்வரர்
( ஸ்ரீ சோளீஸ்வரர் கோவில் தெரு)
147. ஸ்ரீ  சோளீஸ்வரர்
148. ஸ்ரீ வன்மீகநாதர்
149.  ஸ்ரீ விசுவசேனர்
150. ஸ்ரீ கேசவேஸ்வரர்
151. ஸ்ரீ தக்கீஸ்வரர்
( மதனபாளையம் தெரு)
152. ஸ்ரீ மகாஆனந்தருத்ரேஸ்வரர்
( திருமேற்றளி தெரு)
153. ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர்
154. ஸ்ரீ ஓதஉருகீஸ்வரர்
155. ஸ்ரீ அனாதிருத்ரேஸ்வரர்
156. ஸ்ரீ பலபத்திரராமேஸ்வரர்
157. ஸ்ரீ உற்றுக்கேட்ட முத்தீஸ்வரர்
158. ஸ்ரீ காளத்தீஸ்வரர்
159. ஸ்ரீ விஸ்வநாதேஸ்வரர்
( கிருஷ்ணன் தெரு வடகோடி)
160. ஸ்ரீ கற்கீஸ்வரர்
161. ஸ்ரீ லக்ஷ்மீஸ்வரர்
( புத்தேரித் தெரு)
162 .ஸ்ரீ வீரராகவேசம்
163. ஸ்ரீலக்ஷ்மணேசம்
(உபநிஷ்ட பிரம்மேந்திர மடம்)
164. ஸ்ரீ அகத்தீஸ்வரர்
165. ஸ்ரீ அயக்கிரீஸ்வரர்
( புத்தேரி கிராமம்)
166. ஸ்ரீ அனேகதங்காவதம்
167. ஸ்ரீ நாரதீஸ்வரர்
168. ஸ்ரீ கைலாசநாதர்
169. ஸ்ரீ இந்திரேஸ்வரர்
170. ஸ்ரீ ஜெயந்திரேஸ்வரர்
(செவிலிமேடு)
171. ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர்
172. ஸ்ரீ மேற்கு கைலாசநாதர்
173. ஸ்ரீ உத்திர கைலாசநாதர்
174. ஸ்ரீ தக்ஷ்ண கைலாசநாதர்
(தாமல்)
175. ஸ்ரீ வராஹேஸ்வரர்
176. ஸ்ரீ நரசிம்மேஸ்வரர்
( கோவிந்த வாடி அகரம்)
177. ஸ்ரீ கைலாசநாதர்
( பள்ளூர்)
178. ஸ்ரீ பரசுராமேஸ்வரம்
179. ஸ்ரீ ரேணுகாபரமேஸ்வரம்
( திருமால்பூர்)
180. ஸ்ரீ மணிகண்டீஸ்வரர்

Tuesday, November 10, 2020

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் அவதார தின விழா
காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரம்,நவ 10
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஜப்பசி மாத பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவர் அமர்ந்துள்ள இடத்துக்கு வலதுபுறத்தில் உள்ள பிலாத்துவாரத்திலிருந்து அம்மன் வெளிப்பட்டு பக்தர்களுக்கு சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார்.ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்த திருநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும்,சுவாமி வீதியுலாவும் நடைபெறுவது வழக்கம்.செவ்வாய்க்கிழமை அம்மன் அவதார தினத்தை முன்னிட்டு மாலையில் திருக்கோயில் பணியாளர்களால் பால்க்குடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.1008 லிட்டர் பாலாபிஷேகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.மூலவர் காமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் உற்சவரான காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்திற்குள் உலா வந்து நான்குகால் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.பின்னர் சியாமா சாஸ்திரிகள்,சுரேஷ் சாஸ்திரிகள்,கோபி சாஸ்திரிகள்,நடராஜ ச ôஸ்திரிகள் ஆகியோரால் அம்மனுக்கு புஷ்பாஞ்சிலியும் நடத்தப்பட்டது. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு அம்மன் தங்கத்தேரில் ஆலய வளாகத்திற்குள் பவனி வந்து மீண்டும் கோயில் அலங்கார மண்டபத்தை அடைந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மன் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியிலும்,தங்கத்தேரோட்ட நிகழ்விலும் குறைவான பக்தர்களே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

படவிளக்கம்..அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் பக்தர்களுக்கு காட்சியளித்த காமாட்சி அம்மன்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் அவதார தின விழா

காஞ்சிபுரம்,நவ 10
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஜப்பசி மாத பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவர் அமர்ந்துள்ள இடத்துக்கு வலதுபுறத்தில் உள்ள பிலாத்துவாரத்திலிருந்து அம்மன் வெளிப்பட்டு பக்தர்களுக்கு சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார்.ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்த திருநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும்,சுவாமி வீதியுலாவும் நடைபெறுவது வழக்கம்.செவ்வாய்க்கிழமை அம்மன் அவதார தினத்தை முன்னிட்டு மாலையில் திருக்கோயில் பணியாளர்களால் பால்க்குடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.1008 லிட்டர் பாலாபிஷேகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.மூலவர் காமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் உற்சவரான காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்திற்குள் உலா வந்து நான்குகால் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.பின்னர் சியாமா சாஸ்திரிகள்,சுரேஷ் சாஸ்திரிகள்,கோபி சாஸ்திரிகள்,நடராஜ ச ôஸ்திரிகள் ஆகியோரால் அம்மனுக்கு புஷ்பாஞ்சிலியும் நடத்தப்பட்டது. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு அம்மன் தங்கத்தேரில் ஆலய வளாகத்திற்குள் பவனி வந்து மீண்டும் கோயில் அலங்கார மண்டபத்தை அடைந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மன் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியிலும்,தங்கத்தேரோட்ட நிகழ்விலும் குறைவான பக்தர்களே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

படவிளக்கம்..அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி,லெட்சுமி தேவியருடன் பக்தர்களுக்கு காட்சியளித்த காமாட்சி அம்மன்
நன்றி:தினமணி 

www.kanchikamakshi.com

ஸ்ரீ காமாக்ஷி காஞ்சிபுரம் www.kanchikamakshi.com

ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி

kanchikamakshi
www.kanchikamakshi.com 

Sri Kanchi Kamakshi Ambal Devasthanam

https://m.facebook.com/story.php?story_fbid=368145954258522&id=129544953755344

Friday, November 6, 2020

Diwali/Deepavali Naraka ChaturdasiSat, 14 Nov, 2020

Diwali/Deepavali Naraka Chaturdasi  
Sat, 14 Nov, 2020
Sri Kanchi Kamakshi Ambal Devasthanam 
Deepavali early morning vishesha abishegam and spl pooja was sri kamakshi Ambal 

ஸ்ரீ காஞ்சிபுரம் காமாக்ஷி அம்பாள்

ஸ்ரீ காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மனின் சிறப்புரை 

 நற்கதி நல்கும் திருத்தலமாகவும், மேன்மை அளிக்கும் பெரும்பதியாகவும், சிவ—விஷ்ணு—சக்தி—முருக வழிபாடுகளுக்கான சிறப்பிடமாகவும் புராணங்களும் முனிவர்களும் போற்றுகிற ஊர், ஒரு சிலவேயாகும். அவற்றுள்ளெல்லாம் அற்புதப் பதியாக விளங்குவது கச்சிப்பதி என்னும் காஞ்சிபுரம். தென்னிந்தியாவின் தலைச்சுட்டியாக மிளிர்கிற இத்திருத்தலத்தை அறியாதார் யார்? முக்தித் தலங்கள் ஏழனுள் ஒன்றாகப் பாராட்டப்பெறுகிற இவ்வூர், புனிதத்துள் புனிதமாய வாரணாசிக்கு (மட்டுமே) அடுத்ததாக வைக்கப்பெறுகிறது. 

காஞ்சிபுரம் காமாக்ஷியம்மன் திருக்கோவிலில், அம்பிகையின் அருள் திருமேனிக்கு முன்பாக, ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பரமாச்சார்யாளின் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான காமாக்ஷியம்மன் திருக்கோவில், மிகச் சமீபத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் காணவிருக்கிறது.

ஸ்ரீ ஆதிசங்கராசார்ய மூலாம்னாய பீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பரமாச்சார்யாள் என்றும் மஹாஸ்வாமிகள் என்றும் மஹா பெரியவா என்றும் போற்றப்பெற்றார். பரமார்சார்யாளின் அருளையும் ஆசியையும் நாடி, அரசர்களும் இளவரசர்களும், ஆட்சித் தலைவர்களும் ஆஸ்தான பண்டிதர்களும், நாட்டு அதிபர்களும் பிரதம மந்திரிகளும், ஆசான்களும் அன்னக்காவடிகளும்  எவ்வித பேதமுமின்றிக் குவிந்தனர். காமாக்ஷியம்மன் திருக்கோவிலின்மீது மிகுந்த அன்பு பூண்ட பரமாச்சார்யாள், கோவிலின் பூஜைமுறைகளைச் செம்மைப்படுத்தியதோடு, கருவறை விமானத்திற்குத் தங்கத் தகடுகள் வேய்ந்து அழகு பார்த்தார். 

ராஜராஜேச்வரி என்றும் பராசக்தி என்றும் வழிபடப்பெறுகிற காமாக்ஷி அம்பிகை, தன்னை வணங்குபவர்களுக்கு அனைத்து வரங்களையும் அருள்கிறாள்; ஆகவே, போகதாயினி ஆகவும் மோக்ஷதாயினி ஆகவும் திகழ்கிறாள். தன் பக்தர்களுக்கு ஞானம் அளிக்கிறாள்; ஆகவே, ஞான ஸ்வரூபி ஆகிறாள். அவளே, என்றென்றும் லோகமாதா. அவள் அடிபணிந்து வணங்கும் ஒவ்வொருவரும் அவளுடைய சாந்நித்தியத்தை உணரமுடியும். 

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம், அம்பாளை, ஸ்ரீ வித்யாம், சாந்த மூர்த்தீம், ஸகல ஸுரநுதாம், ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம்  என்று போற்றுகிறது. சாந்த மூர்த்தீம் என்பதால், அம்பாளின் சாந்த ஸ்வரூபம் சிறப்பாகச் சுட்டப்பெறுகிறது. ஸ்ரீ காமாக்ஷி அம்பாள், சாந்த ஸ்வரூபிணி. லலிதா த்ரிபுரசுந்தரியான ஜகன்மாதா, இங்கு (காஞ்சிபுரத்தில்) அருள்மிகு காமாக்ஷியாகக் கொலுவிருக்கிறாள். தவத் திருக்கோலம் பூண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். திருக்கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில் (இக்ஷு கோதண்டம்), மலர் அம்புகள் (பஞ்ச பாணங்கள்) கொண்டு இலங்குகிறாள். கருணாமூர்த்தியாகக் கனிவுகொடுக்கும் அம்பாள், தனது திருக்கண்களாலேயே பக்தர்களுக்கு அருள் கடாக்ஷிக்கிறாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ காமாக்ஷியம்மனுக்குப் பூஜை செய்யும், 75 வயது முதியவரான பரம்பரை அர்ச்சகர் நீலக்கல் என் ராமசந்திர சாஸ்திரிகள், ‘அம்பாளின் திருநாமமான காமாக்ஷி என்பதே, சரஸ்வதியும் லக்ஷ்மியும் அவளின் திருக்கண்களாக விளங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது’ என்கிறார். 

காஞ்சி நகரத்தின் மையத்தில் ஒளிர்கிறது அருள்மிகு காமாக்ஷியம்மன் திருக்கோவில். அருள்மிகு ஏகாம்ரேச்வரர் திருக்கோவில் வடமேற்கிலும் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் தென்கிழக்கிலும் துலங்குகின்றன. நகரத்தின் பிற பிரதான கோவில்கள் யாவும், காமாக்ஷியம்மன் திருக்கோவிலை நோக்குமாறு அமைந்துள்ளன. கருவறையில், காமாக்ஷியம்மன், பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக, பஞ்ச ப்ரஹ்மங்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேச்வரன், சதாசிவன் ஆகியோர்மீது பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்கிறாள். 

ஆதிசங்கரரால் அம்பிகையின் திருமுன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்திற்கு அர்ச்சனைகளும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தின் வேறெந்த சிவன் கோவிலிலும் அம்பாள் சந்நிதி கிடையாது. உயர்வுமிக்க பராசக்தியாக, காமாக்ஷியின் பேரருளே காஞ்சிபுரம் முழுவதும் ஆட்சி செய்கிறது. அம்பாள் கருவறையைச் சுற்றி, அர்த்தநாரீச்வரர், சௌந்தர்யலக்ஷ்மி, கள்வர் (திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவர்), வாராஹி ஆகியோருக்கும் கோஷ்ட சந்நிதிகள் உள்ளன.  

ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள கருவறைப் பகுதிக்கு ‘காயத்ரி மண்டபம்’ என்று பெயர். இம்மண்டபத்தில், 24 தூண்கள் உள்ளன; இவை, காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களைக் குறிக்கின்றன. காயத்ரி மண்டபத்திற்கு வலப்பக்கமாக, வாராஹி, அரூபலக்ஷ்மி, சந்தான கணபதி ஆகியோரின் சந்நிதிகள் காணப்படுகின்றன. வெள்ளிக் கவசமிடப்பட்டுள்ள சந்தான ஸ்தம்பம், பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்தித்த தசரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பர். இராமருக்கும் அவருடைய வம்சாவளியினருக்கும் காமாக்ஷியே குடும்ப தெய்வம். 

இந்தத் திருக்கோவிலின் வழக்கப்படி, காமாக்ஷியம்மன் பிரசாதமான குங்குமம், முதலில் பிரார்த்தனைகளோடு அரூபலக்ஷ்மிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவளுடைய பாதங்களிலிருந்து பக்தர்களால் எடுக்கப்பட்டு நெற்றியில் அணிந்துகொள்ளப்படுகிறது. 

காமாக்ஷி விலாஸம் என்னும் நூல் காஞ்சிபுர நகரம், அதன் எல்லைகள், விஸ்தீரணம், காமாக்ஷியம்மன் திருக்கோவில், பிற கோவில்களுக்கு இக்கோவிலுடன் இருக்கும் தொடர்பு ஆகிய அனைத்து விவரங்களையும் தருகிறது. அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சிவ, விஷ்ணு, முருக, கணபதி ஆலயங்களின் புனிதத்துவம் குறித்தும் அவை காமாக்ஷியம்மன் கோவிலிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பது குறித்தும் மிக விவரமாக வர்ணிக்கும் காமாக்ஷி விலாஸம், அம்பாள் காமாக்ஷியின் காருண்யத்தையும் மேன்மையையும் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது. காஞ்சிபுரத்திற்கு அப்பாலுள்ள சிவன் கோவில்களின் அம்பாள் சந்நிதிகள்கூட, காமகோஷ்டம் என்றே வழங்கப்பெறுகின்றன. துர்வாசரால் இயற்றப்பெற்றதாக அறியப்படும் சௌபாக்ய சிந்தாமணி என்னும் கிரந்தத்தின்படியே, காமாக்ஷியம்மன் திருக்கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன. சக்தியின் பஞ்சபூதத் தலங்களை விளக்குகிற சௌபாக்ய சிந்தாமணி, காஞ்சிபுரமே அம்பிகையின் ஆகாசத் தலம் என்றும் உரைக்கிறது (சிவபெருமானுக்கான ஆகாசத் தலம் சிதம்பரம் என்பதுபோல). 

ஸ்ரீ லலிதா அஷ்டோத்தர சதநாமாவளி, காமாக்ஷியம்மனைக் காமகோடி மஹாபீடஸ்தாயை நமோ நம: என்று போற்றுகிறது. ஸ்ரீ லலிதா த்ரிசதி, அவளைக் காமேச்வரி என்றும், காமகோடி நிலயா என்றும் அழைக்கிறது. த்ரிகூடா, சிவ காமேச்வராங்கஸ்தா, சிவஸ்வாதீன வல்லபா, காமகோடிகா போன்ற திருநாமங்களால், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அவள் துதிக்கப்படுகிறாள். 

ஸ்ரீ வித்யையின் முக்கியத்துவம்

ஸ்ரீ வித்யை ஞானத்தை அடைவதே, மிக உயர்வான ஞானமாகக் கருதப்படுகிறது. முறையாகப் பயிலப்பெற்று, நெறியோடு நடைமுறைப்படுத்தப்பெற்றால்,ஸ்ரீவித்யையின் வாயிலாக, ஸாதகன் தன்னைப் பிரபஞ்சத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். பற்பல பிறவிகளில் தெய்வ வழிபாடுசெய்து பக்குவப்பட்டிருந்தாலொழிய, இப்படிப்பட்ட மேலான முக்திப் பாதை சாத்தியமில்லை. ஆன்ம பலத்தை உயர்த்திக் கொள்ளமட்டுமேஸ்ரீவித்யையைப் பயன்படுத்தி, அம்பாளை முறையோடும் நெறியோடும் வழிபடுபவர்கள் வெகு சிலரே ஆவர். 1968ல், ஆந்திரத்தில் முகாமிட்டிருந்த மஹாபெரியவா,அமைதிக்காகவும் சாந்தத்திற்காகவும் ஸ்ரீவித்யை பயிலப்படவேண்டுமென்றும்,  பரமானந்தத்தின்பொருட்டுத்தகுதியானவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் உபதேசித்தார்கள். 

காஞ்சிபுரத்திற்கு ஏராளமான பண்டைய பெயர்கள் உள்ளன. துண்டீர மண்டலம், தபோவனம், பிரஹ்மசாலை, அற்புத க்ஷேத்திரம், ஸத்யவ்ரத க்ஷேத்திரம், பாஸ்கர க்ஷேத்திரம், தர்ம க்ஷேத்திரம் ஆகியவை இப்பெயர்களில் சில. காஞ்சியின் தெய்வங்களின் மஹத்துவத்தைப் பஞ்சசத் உரைக்க, ஊர் மற்றும் தீர்த்தங்களின் பெருமையை சதக்யானம் கூறுகிறது. ஸ்ரீ காமாக்ஷியம்மனின் பிரபாவத்தைக் காமாக்ஷி விலாஸம் விவரிக்கிறது. மஹாலக்ஷ்மி, ஹயக்ரீவர், மனுச் சக்கரவர்த்தி, தசரதச் சக்கரவர்த்தி, துண்டீர மஹாராஜா ஆகியோர் காமாக்ஷியம்மனை வழிபட்டுள்ளனர். 6ஆம் நூற்றாண்டில், இத்திருக்கோவில் பெரியதாக விரிவுபடுத்தப்பட்டதாகத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

SRI KANCHI KAMAKSHI TEMPLE

SRI KANCHI KAMAKSHI TEMPLE