Wednesday, October 20, 2021

Aipasi Pooram

 source for Sri Lalitha Sahasranamam and Lalitha Trishathi Mantras also.

Interestingly as we enter the Raja Gopuram of Kamakshi temple, one can see Sanndhi for Agasthya and Hayagriva Moorty who were the first Devi Upasakas. The Sannidhi is located on the top and one has to look upwards in the left and right direction. There is a shop selling pooja articles below the Raja Gopuram and after we cross it we can view Hayagriva and Agasthya on the Top left and Right Side. 

Bandasura Vadam: Jaya Sthambam in Temple

Interestingly, the Sthala Puranam of Kamakshi Temple is also related to Bandasura Vadam/killing Bandasura demon as described in Lalithopakyanam.

Bandasura born from the ashes of Manmatha was troubling the Devas and the Devas/Celestial beings took the form of parrots to perform penance in Kanchipuram under Champaka Tree and prayed to Parashakthi. (Interestingly one can still see parrots in the outer Prakara/Corridor of the Temple).

Goddess in the form of young girl as Bala Tripurasundari killed Bhandasura and he was laid below Kamakshi Temple. A Sthambam/pillar was raised in memory of the Victory over Bhandasura. Hence it is known as Jaya Sthambam. The Temple has three Kodi Maram/Dwaja Sthambam and the middle one which we see in the Queue line is Jaya Sthambam.

Bala Tripurasundari

After slaying Bhandasura the Goddess was ferocious and in order to calm her, the Devas/Celestial Beings constructed the Gayatri Mandapa where the 24 pillars represent the 24 syllables of Gayatri Mantra. The seated the ferocious goddess in a simhasana and closed the doors of the Gayatri Mandapa. They prayed to the Goddess all through the night.

The next day when the Devas opened the doors the Goddess was a seen in her smiling form as Lalitha Parameswari in Padmasana Posture. Kamakshi appeared in this form in Srimukha Year, Tamil Masi Month (Sun in Kumbha Rashi), Poora/Purva Phalguni Nakshatra, Friday. Every year Brahmotsavam is celebrated during Masi Month for 10 days including Poora Nakshatra Avatara Day.

Gayatri mandapam houses Kamakshi Devi in 3 Forms namely Kamakshi D

Bilakasam

Kanchipuram is the Shakthi Peetam where the Hip Bones of the Goddess are said to have fallen. 'Kanchi' refers to the ornament worn around the Hip. Kamakshi devi is said to havecome to Kanchipuram Temple though this Bilakasam on Poora Nakshatram day.Bilakasam is located near the Right Side of Goddess Kamakshi.

According to Devathin Kural by Paramacharya Sri Chadrasekara Swami, 'Bil' means 'cave' and 'Akasam' means 'Space'. As the Baby in Mother's Womb gets nourished by its mother through the umbilical cord, all the creation in the Universe gets nourished by Parashakthi through this Bilakasam.

Kamakshi: The only Shakthi Temple in Kanchipuram

Manmatha after he was burnt to Ashes by Shiva prayed to Kamakshi that the world only knew of him as being burnt by Shiva. He wanted recognition that he is also responsible for Love, Desire and Passion in this entire universe.

Goddess Kamakshi took pity on Manmatha and withdrew the powers of all goddess from all temples onto herself. All Shiva Temples in the world had no consort and their powers were brought within Goddess Kamakshi. Goddess Kamakshi appears here with the Sugarcane Bow and Flower Arrows that is held by Manmatha/Kama deva.

After withdrawing her powers the Shiva Temples were devoid of Shakthi. Brahma deva prayed to her to re-establish the Shakthi in all Shiva temples to save the world. Goddess replied that she had withdrawn her power on behalf of Manmatha and that she would re-establish her powers again in areas outside Kanchipuram.

Since no Goddess Forms are seen in Shiva Temples within Kanchipuram, this place is known as 'Sivajit Kshetram'. It is also said that all Raja Gopuram/Main Vimanam of other temples face Kamakshi Amman Temple only in Kanchipuram.

Above details of Kamakshi devi is detailed in 'Kamakshi Vilasam' and 'Sowbhagya Chitamani' written by Durvasa is the book based on which daily pooja is performed in Kamakshi Temple

Thursday, September 30, 2021

Navarathri

 நவராத்திரியின் முக்கியத்துவம் 9 ஒன்பது நாட்கள்

வெற்றிக்குரிய விஜய தசமி திதியும் வன்னிமரவழிபாடும்

07.10.2021 முதல் 15.10.2021 வரை 9 நாட்கள்

பிலவ வருடம் – புரட்டாசி 21 முதல் 29

SIGNIFICANCE OF NAVARATRI 9 NINE DAYS

VICTORY VIJAYA DASHAMI TITHI  BENEFITS SHAMI TREE WORSHIPING


அக்., 14 (வியாழன்) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 10.30 – 12.00 மணி)

அக்.,15 (வெள்ளி) விஜயதசமி (கொலு எடுக்க காலை 9.00 - 10.30 மணி)


புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடுகிறோம்.


நவராத்திரி


மஹாளய அமாவாசைக்கும், மஹா சஷ்டிக்கும் இடையே வரக்கூடியது தான் நவராத்திரி எனும் கொண்டாட்டம்.


அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவராத்திரி

ஆரம்பம்.


நவராத்திரி தினத்தில் ஒவ்வொரு தினத்தில் அம்மன் எந்த ரூபத்தில் காட்சி தருவார் என்பதை பார்ப்போம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனின் ரூபத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அவதாரங்களாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபங்களாக நமக்கு காட்சி தருவார்.


துர்க்கையின் 9 வடிவங்கள்: நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்


துர்க்கையின் ஒன்பது உருவங்கள்

முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்

இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம்

மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்

நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்

ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்

ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள்

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள்

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம்


அக்., 14 (வியாழன்) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 10.30 – 12.00 மணி)


அக்.,15 (வெள்ளி) விஜயதசமி (கொலு எடுக்க காலை 9.00 - 10.30 மணி)


நவராத்திரியின்போது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்கும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரைப் பூஜிக்கிறோம்.


வீரம் தரும் துர்க்கை


துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.


செல்வம் தரும் லட்சுமி


இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ லட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.


சகல வித்தை தரும் சரஸ்வதி


சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

உலகம் முழுவதும் வண்ணமயமான, துடிப்பான பண்டிகைகளின் நிலமாக இந்தியா அறியப்படுகிறது. இங்கே, மதமும் ஆன்மீகமும் சமூக மற்றும் கலாச்சார துணிவின் பிரிக்க முடியாத பகுதியாகும்; எனவே, இந்தியர்கள் கொண்டாடும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஒரு ஆழமான அர்த்தமும், காரணமும், முக்கியத்துவமும் உள்ளது, நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் மிகப்பெரிய மற்றும் மிக நீண்ட பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. புராணங்களின் படி, இந்த சந்தர்ப்பம் துர்கா தேவியின் அரக்கன் மன்னர் மஹிஷாசுரனை வென்றதையும், தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது. 10 வது நாள் விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது.

மஹிஷாசுரமர்த்தினிக்கு எதிராக போரை நடத்திய ஒன்பது நாட்களில் துர்கா ஒன்பது வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறார் என்று நம்பப்படுகிறது - சைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கட்யானி, காலராத்ரி, மஹக ow ரி மற்றும் சித்திதாத்ரி.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மக்கள் பெரும் முக்கியத்துவத்தை இணைத்து, இந்த வடிவங்களில் தெய்வத்தை கன்யா பூஜை, சிறப்பு நைவேத்யம் (பிரசாதம்) மற்றும் அலங்கரம் (அலங்காரங்கள்) மூலம் வீட்டில் வணங்குகிறார்கள். இந்த நாட்களில் ஒவ்வொன்றிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ராகங்களில் தேவி மகாத்யம் ஓதவும், கிளாசிக்கல் எண்களைப் பாடவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகிறார்கள்.கொண்டாட்டங்கள் ஏற்கனவே முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இரண்டு நாட்கள் எங்களுக்கு பின்னால், இந்த சிறப்பு பூஜைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதையும், நவராத்திரியின் போது எந்த மலர்கள், நைவேத்யம் மற்றும் ராகங்கள் குறிப்பிடத்தக்கவை 

நவராத்திரி நாயகி திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை

ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் ஆலயம்தான் திருமீயச்சூர் திருத்தலம்,  பூர்வ ஜென்மத்தில் புண்ணியவசத்தால் தான் வரமுடியும்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருமீயச்சூர் தலம். இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. சூரியன் அருணன் இந்திரன் வாலி  சுக்ரீவன் 


 ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இதுதான், பக்தியும் பொங்க தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!


பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். 


எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள். இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள்.


 இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் இருந்தபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!


 ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பெருமையைப் பற்றி விவரித்தார்.

இதைக்கேட்ட அகத்தியர்,"ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன்  கிடைக்கும்?'' என கேட்டார்.அதற்கு ஹயக்கிரீவர்,"பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் என்றார். 


திருமீயச்சூர் லலிதாம்பிகை


ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில்

அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த

முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது.

அகத்தியர் தன் மனைவி  லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று இவ் ஸ்ரீ லலிதாம்பிகையை தரிசித்து "ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் " சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு *நவரத்தினங்களாக*  தரிசனம் தந்தாள். 

அப்போது அகத்தியர், "ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை" என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.


 ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது. நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.

அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்

போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.*சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்* போல அமைத்து அங்கே இரண்டரை டின்  தூய நெய்யைக்கொண்டு நிரப்புவர்.

அதன் பின்னர் கருவறையின் திரையை

விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில்பிரதிபலிக்கும். 

இதனை தரிசிப்பவர்களுக்கு  மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம்.

நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி

பெற்ற தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு

லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

அன்னை துர்க்கையின் ஒன்பது வடிவங்கள்.  

துர்க்கா தேவி வன துர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, லவண துர்க்கா, தீப துர்க்கா, ஆசுரி துர்க்கா என்று ஒன்பது வகையான வடிவங்களை அடைகிறாள் என்பது புராணச் செய்தி.


வனதுர்க்கா:  


தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பாற்றுபவள்.


சூலினி துர்க்கா: 

 

துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.


ஜாதவேதோ துர்க்கா:  


சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்துது தீப்பொறிகள் பிறந்தன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக்கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு ஜாதவேதோ துர்க்கை என்று பெயர்.


சாந்தி துர்க்கா:  


தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.


சபரி துர்க்கா:  


ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது பார்வதிதேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கா தேவியே சபரி துர்க்கா என்று சொல்லப்படுகிறாள்.


ஜ்வாலா துர்க்கா:  


அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப் பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்தச் செயலைச் செய்த துர்க்கா தேவி ஜ்வாலா துர்க்கா எனப்படுகிறாள்.


லவண துர்க்கா:  


ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அந்த அசுரனை அழிக்கப் புறப்பட்ட லட்சுமணன், தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே லவண துர்க்கையாவாள்.


தீப துர்க்கா:  


பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய்ஞானமான ஒளியை வழங்கும் தீப லட்சுமி.


ஆசுரி துர்க்கா:  


பக்தர்களிடமுள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள்.

திருவருள் தரும் ஸ்ரீ தேவி மகாத்மியம்!

அன்னை பராசக்தி, ஒன்பது அசுரர்களை அழித்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவே, தேவிக்கு ஒன்பது நாள்கள் விழா எடுத்து போற்றி வழிபடுகிறோம் என்கின்றன ஞானநூல்கள். அசுரர் சம்ஹாரத்துக்காக ஆதிசக்தி நடத்திய போர் குறித்து, மிக அற்புதமாக விவரிக்கிறது தேவிமகாத்மியம். மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமகாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் ‘சப்த ஸதீ’ என்று போற்றப்படுகிறது.


சிதம்பர ரகசியம், காத்யாயனீ தந்திரம், மேரு தந்திரம் போன்ற ஞானநூல்களும் தேவிமகாத்மியத்தைப் பலவாறு போற்றுகின்றன. ‘திரிபுரா மூன்று வடிவம் கொண்டவள். தீமையின் வடிவமான அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள, காளி உருக்கொண்டாள். அவளே திருமகளாகவும் சரஸ்வதியாகவும் தோன்றினாள். மார்க்கண்டேய புராணத்தில் உள்ள அவளது மகிமையைப் படிப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் அடைவர்’ என்று பரமேஸ்வரர் அருளியதாக விவரிக்கிறது, சிதம்பர ரகசியம். நாமும் தேவியின் மகிமைகளைப் படித்து பலன் பெறுவோம்.

வினைப்பயனே நம்முடைய இன்ப, துன்பங்களுக்குக் காரணமாகும். அப்படியான ஒரு முன்வினையின் காரணமாக அசுரர்களுக்கு அரிய வரங்கள் கிடைத்தன. தேவர்களுக்கோ, அசுரர்களால் பல கொடுமைகள் நேர்ந்தன. அதாவது, பிரம்ம தேவனிடம் வரம் பெற்ற அசுரர்கள். தேவர்களை வென்று, சொர்க்கத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அத்துடன் நிற்காமல்  தேவர்களையும் ரிஷிகளையும் வாட்டி வதைத்தார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆகவே, ரிஷிகளும் தேவர்களும் ஆதிசக்தியைச் சரணடைந்தார்கள்.


தேவர்களுக்கு அருளத் திருவுளம் கொண்டாள் சக்தி. சும்ப - நிசும்பர் முதலான அசுரக்கூட்டத்தை அழிக்க முடிவெடுத்தாள்.  உலகையும் உயிர்களையும் பாதுகாக்க காளிகா- கௌசிகீயாக வேறுபட்டாள். இன்னும்பல திருவடிவங்களை ஏற்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தாள். அவள் கட்டளையிட... காலம் செயல்பட்டது!


பூலோகத்தில் கங்கைக்கரையை வந்தடைந்தாள் கெளசிகீ. அவளைக் கண்ட சண்டன் முண்டன் எனும் அசுர சகோதரர்கள், அந்தப் பெண்ணின் அழகைக் குறித்து, தங்கள் தலைவர்களான சும்ப-நிசும்பரிடம் சென்று தகவல் தெரிவித்தார்கள். சண்ட-முண்டர்கள் விவரிக்க விவரிக்க, அசுரத் தலைவர்களுக்குள் ஆசை பற்றிக்கொண்டது. கங்கைக்கரைப் பெண்ணை உடனே காணும் ஆவலில், சுக்ரீவன் (ராமாயணத்தில் வரும் வாலியின் தம்பி சுக்ரீவன் வேறு) என்ற தூதனை கௌசிகீயிடம் தூதனுப்பினார்கள்.

அதன்படி, தன்னிடம் வந்து சேர்ந்த தூதனிடம், ‘‘போரில் என்னை வெல்பவர் எவரோ, அவரையே கரம் பிடிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறேன். எனவே, உன் தலைவர்களை போருக்கு வரச் சொல்’’ என்று கூறியனுப்பினாள், கெளசிகீயாகத் திகழ்ந்த சக்தி.

தூதன் வந்து சொன்ன தகவலைக்கேட்டு கோபம் கொண்ட சும்பனும் நிசும்பனும் தங்கள் தளபதியான தும்ரலோசனை அழைத்து, ‘அந்தப் பெண்ணைக் கட்டி இழுத்து வா!’ என்று கட்டளையிட்டு, பெரும்படையுடன் அனுப்பிவைத்தனர். ஆனால் விதி வலியது அல்லவா? தேவியின் பராக்ரமத்தால் எரிந்து சாம்பலானான் தூம்ரலோசன். இந்தத் தகவல் கிடைத்ததும், சும்பனும் நிசும்பனும் ஆவேசம் அடைந்தனர். அடுத்ததாக சண்ட-முண்டர்களையே களத்துக்கு அனுப்பிவைத்தனர்.

இதையேற்று, சதுரங்கப் படையணியுடன் சென்று தேவியை எதிர்கொண்டனர் சண்ட-முண்டர்கள். பொன்மயமான ஒரு மலையின் மீது சிங்க வாகனத்தில் வீற்றிருந்த அவளைக் கண்டதும், வாளை உருவிக்கொண்டு பாய்ந்தனர் அசுரர்கள். வெள்ளமென ஆர்ப்பரித்து வந்த அசுர சேனையைக் கண்டதும், ஆவேசம் கொண்டாள் அம்பிகை. அப்போது, அவளின் நெற்றியில் இருந்து தோன்றினாள் காளி. பாய்ந்து வந்த அசுரர்களை, வாளாலும் கட்வாங்கம் எனும் ஆயுதத்தாலும் வெட்டியெறிந்தாள், காளிதேவி. சிலரைக் காலால் மிதித்தே கொன்றாள். இப்படி அசுரப்படையைச் சிதறடித்தவள், கடைசியாக சண்ட- முண்டர்களையும் வதைத்தாள்; `சாமுண்டா’ என்று திருப்பெயரை ஏற்றாள். இந்த நிலையில் வேறு வழியின்றி அசுரத் தலைவர்களான சும்பனும் நிசும்பனுமே போர்க்களத்துக்குப் புறப்பட்டனர்.

அவர்களது கட்டளைப்படி... அசுரகுலத்தின் முக்கியத் தளபதிகளும், கோடி வீரர்கள் எனப்படும் அசுரர்களின் ஐம்பது குலத்தினரும், காலகர், தௌர்ஹ்ருதர், மௌரியர், காலகேயர் ஆகியோரது படைகளும் ஒன்றுசேர... பல கோடிப் பேர் நிறைந்த அந்தப் பெரும்படை ஆரவாரத்துடன் போர்க்களத்துக்கு வந்து, தேவிசக்தியையும் காளியையும் நாற்புறமும் சூழ்ந்தது.

அதேநேரம், அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது! அசுர குலத்தை அழிக்க... சிவனார், திருமால், பிரம்மதேவன், குமரன் மற்றும் இந்திரன் ஆகியோரிடம் இருந்து அவரவரின் சக்திகள் பெரும் ஆற்றலுடன் வெளித் தோன்றினர்.

அன்ன வாகனத்தில் அமர்ந்து, அட்ச மாலையும் கமண்டலமும் ஏந்தியவளாகத் தோன்றினாள் பிரம்ம சக்தியான பிராம்மி.

திரிசூலம் ஏந்தி, நாகங்களைத் தோள் வளையாக அணிந்தபடி, சந்திர கலை அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தினளாகத் தோன்றினாள் மகேஸ்வரனின் சக்தியான மாகேஸ்வரி.


சக்தி எனும் ஆயுதத்துடன் மயில் வாகனத்தில் எழுந்தருளினாள் குமரனின் வடிவினளான கௌமாரி. விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி, சங்கு- சக்ரம், கதை மற்றும் சார்ங்கம் (வில்) ஆகிய ஆயுதங்களுடன் கருடன் மீது எழுந்தருளினாள். திருமாலின் வராஹ வடிவை ஏற்று வாராஹிதேவி தோன்றினாள். நரசிம்மத்தின் அம்சமாக நரசிம்மீயும் எழுந்தருளினாள். இந்திரனின் சக்தியம்சமான இந்திராணி வஜ்ராயுதத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளினாள்.


இந்த ஏழுபேரும் தேவிசக்தியாகிய சண்டிகாவை அடைந்தனர் (இதற்குப் பிறகும், தேவிசக்தியிடம் சிவதூதீ என்றும் ஒரு தேவி தோன்றியதாகப் புராணம் கூறுகிறது. ஆனாலும் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா ஆகியோரே சப்தமாதர் வரிசையில் இடம்பெறுகின்றனர்).


தேவியர் அனைவரும் ஒன்றிணைய, அசுரப்படை பெரும் அழிவைச் சந்தித்தது. இந்த நிலையில் ரக்தபீஜன் எனும் அசுரனை இந்திராணி வஜ்ராயுதத்தால் தாக்க, அவன் உடம்பில் இருந்து பீறிட்ட ரத்தத்துளிகளில் இருந்து ஆயிரமாயிரம் ரக்தபீஜர்கள் தோன்றினர். அசுரப் படை மீண்டும் பலம் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆதிசக்தியின் ஆணைப்படி, ரக்தபீஜனின் குருதியை ஒரு துளிகூட நிலத்தில் சிந்தாதபடி பருகினாள் சாமுண்டாதேவி. அதனால் ரக்தபீஜனும் அழிந்தான். அவனைத் தொடர்ந்து நிசும்பனும் கொல்லப்பட்டான்.


நிறைவில் எஞ்சியிருந்த சும்பன் கடும் கோபத்துடன் ஆதிசக்தியை இழித்துரைத்தான். ‘`கர்வம் பிடித்தவளே! மற்றவர்களின் பலத்தை துணையாகக் கொண்டு போர்புரிவது அழகா?’’ என்று சப்ததேவியரைச் சுட்டிக்காட்டி, கூறினான்.


இதைக்கேட்டு, அண்ட சராசரங்களும் நடுநடுங்க சிரித்த மகா சக்திதேவி, ‘`இவர்கள் அனைவரும் எனது அம்சமே!’’ என்றாள். மறுகணம் சப்த தேவியரும் ஆதிசக்தியுடன் ஐக்கியமாக, ஏக(ஒரே) தேவியாகக் காட்சி தந்தாள் ஆதிசக்தி. தேவர்கள் ஜயகோஷம் எழுப்ப... தேவியின் பொற்கரங்கள் திக்கெட்டும் ஆயுதங்களைச் சுழற்றிப் பகையறுத்தன; அம்பிகையின் வல்லமையால், சும்பனும் வதம் செய்யப்பட்டான். தேவர்கள், தேவிசக்தியின் மேல் பூமாரி பொழிந்தனர்!


சப்தமாதர்களின் திருவருள்.


மிக அற்புதமானது இந்த தேவிமகாத்மிய திருக்கதை. சிவவாக்குப் படி, இந்தத் திருக்கதையை ஒருமுகப்பட்ட மனதுடன் அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி நாட்களில் படிப்பதாலும், படிக்கச் சொல்லி கேட்பதாலும் சகல நன்மைகளும் கைகூடும். குறிப்பாக அம்பாளுக்குரிய நவராத்திரி புண்ணிய காலத்தில் இந்தக் கதையைப் படிப்பது, மிகவும் விசேஷம்.


தேவிமஹாத்மியம் விவரிக்கும் சப்த மாதர்கள் வரலாறும் சிறப்பானது. முறைப்படி இவர்களை வழிபட, அனைத்து நலன்களும் கிடைக் கும்; நினைத்த காரியங்கள் ஈடேறும் என்கின்றன ஞான நூல்கள்.

ஸ்ரீசக்கரத்தில் முதல் ஆவரண பூஜையில் இந்த சப்தமாதர்கள் பூஜை செய்யப்படுகின்றனர். பகவதி ஸ்தோத்ரமாலையில் சப்தமாதர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கலிங்கத்துப் பரணியிலும் சப்தமாதர்களுக்கு கடவுள் வாழ்த்தில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.இந்த நவராத்திரி சமயத்தில் அவர்களைப்பற்றி அறிவோம்.


1. பிராம்ஹி


பிராம்ஹி வடிவம் எடுத்து ஹம்ஸம் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்ப்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம். அம்பிகையின் ஒரு அம்சம் பிரம்மசக்தி. சிருஷ்டி ஆற்றல் பெற்றது. வாகாத்மகமான ரூபத்தோடு இருப்பவள். ப்ராம்ஹணீ என்பதற்கு பரமசிவனின் பத்தினி என்றும் பெயர்.தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசிர்வதிப்பாள்.தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.


2. மாஹேஸ்வரி


மகேஸ்வரி வடிவம் கொண்டு, திரிசூலமும், பிறை மதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

மகேஸ்வரன் பரமசிவனுடைய பத்தினி மாகேஸ்வரி. யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித:தஸ்ய பிரக்ருதி லீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர: எனும் ச் ருதி வாக்கியத்தில் குறிக்கப்பட்ட மஹேஸ்வரன் த்ரிகுணாதீதமானதும் நிர்குணமானதுமான வடிவமுடையவர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப் போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிடமுடியாத பெரும் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.


நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம் கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும்.குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள்.இத்தேவதையை மனமார வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.


3  கௌமாரி


மயில் வாகனம் மீது கொழிக்கொடி சூழ, மகா சக்தி ஆயுதத்தைத் தாங்கி பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணி உனக்கு நமஸ்காரம். தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர் குமாரர் என வணங்கப்படுகிறார். அஹங்காரத்திற்கு தேவதையாக இவர் சொல்லப்படுகிறார். ரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும்.பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம் பழ சாதம் நிவேதனம் செய்ய நலம் பெறலாம்.


4 வைஷ்ணவி


வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் என்ற வில் இவைகளை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  லக்ஷ்மி வடிவாக இருப்பவள் என்று அர்த்தம். விஷ்ணுவின் சக்தியாய் பொலிபவள். தேவி புராணத்தில்சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததாஹரிஹரவிஷ்ணு ரூபா த்வா தேவி வைஷ்ணவீ தேவி தேந கீயதே என்று இவள் புகழ் பாடுகிறது. திருமாலைப் போல சங்கு, சக்கரம், கதை முதலியவற்றைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ என்று பெயர் பெற்றாள் என்றும் கூறுகிறது. தேவியே திருமால். திருமாலே தேவி. கோபிகைகளை மோகத்தில் ஆழ்த்திய கிருஷ்ணன் புருஷ வடிவம் என்பதை மமைவ பௌருஷம் ரூபம் கோபிகா ஜன மோகன ம் என்று லலிதோபாக்யானத்தில் லலிதையே கூறியதாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.  

அந்த லலிதோபாக்யானத்திலேயே திருமால் வீரபத்திரரிடம்

ஆத்யா சக்திர் மஹேசஸ்ய சதுர்தா பிந்ந விக்ரஹா

போகே பவாநீ ரூபா ஸா துர்க்காரூபா ச ஸங்கரே

கோபேச காளிகா ரூபா பும்ரூபா ச மதாத்மிகா என்று ஆதி சக்தியே போக வடிவில் பவானியாகவும், யுத்தத்தின் போது துர்க்காம்பிகையாகவும், கோபத்தில் காளியாகவும், புருஷ வடிவில் விஷ்ணுவாகவும் நான்கு வடிவங்களில் அருள்வதாகக் கூறப்பட்டுள்ளது. கூர்ம புராணத்தில் ஹிமவான் தேவியை துதிக்கையில் க்ஷீராப்தி சயனம் கொண்ட நாராயணன் வடிவை நமஸ்கரிக்கிறேன் எனப் பொருள்படும்சீழுக்கு அதிதேவதையான இவள் சினமுற்றாள் விஷக்கடிகள் பெருகும். தென்னை ஓலையால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து, பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால் நிவாரணம் பெறலாம்.


5 வாராஹி


லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும் படி உலகம்உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்த மாதர்களில் தலையானவள்.மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் இவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி இவள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள்.ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை போன்றவற்றை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தி அவரின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு ரூப பேதங்களில் இவளை வழிபடுகின்றனர்.


பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானம் பரக்கப் பேசுகிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான  ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.இவன் ஆரோகணித்து வரும் ரதம் ‘கிரி சக்ரரதம் என்றும், இவளின் யந்திரம் ‘கிரியந்த்ரம்’ என்றும் போற்றப்படுகிறது. (கிரி - பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது. பராபட்டாரிகையான லலிதையின் மனக்குறிப்பறிந்து கீதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள்.மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும், மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய பயங்களையும், இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம்.உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரீணி, கிரிபதா போன்றோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாவர்.


6 இந்த்ராணீ

(ஐந்த்ரீ)


கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே,  விருத்தாசுரன் பிராணனைப் போக்கியவளே. உன்னை நமஸ்கரிக்கிறேன். இவள் இந்திரனின்சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவத யானையே இவளின் வாகனம். தேவலோக ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிகைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்று ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம் கைலாசம் இவைகளைக் குறிக்கும். அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும்  கீழ்க்கண்ட ஸ்லோகம்.சதையின் அதி தேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பீசி பலாச்சுளை நிவேதித்து தானம் அளித்தால் நலம் உண்டாகும்.


7 சாமுண்டி


தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம் கொண்டவள். சண்டா என்று சங்க் புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள். நரம்பின் தலைவியான இவள் சீற்றம் கொண்டால் ஊர் கலகம் உண்டாகும். காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர் அபிஷேகம் செய்தும் அவல், சேமியா ஆகியவையிலான திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் தேவி மனம் குளிர்வாள்.இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும் எளிதில் தீரும்.


நவராத்திரியின்  9 ஒன்பது நாட்கள்


நாள் 1


நவராத்திரியின் முதல் நாளில், கன்யா பூஜை அல்லது மகேஸ்வரியில் துர்காவை பாலாவாக வணங்குகிறார்கள். இந்த நாளில் தேவி மது மற்றும் கைதாபா பேய்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. மதுகைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய தேவியை அபயம், வரதம், புத்தகம், அக்கமாலை ஆகிய வற்றைக் கொண்ட கரங்களோடு குமரி வடிவமாக அலங்கரிப்பார்கள். மல்லிகை மற்றும் வில்வம் முதன்மையாக பூஜை செய்யபயன் படுத்தப் படுகின்றன.இந்த நாளுக்கான சரியான பிரசாதமாக வென் பொங்கல் மற்றும் கராமணி சுண்டல் செய்கிறார்கள். தோடி ராகத்தில் பக்தி எண்களைப் பாடுவது தேவியைப் பிரியப்படுத்தும் என்று கூறப்படுகிறது.


மாகேஸ்வரி காயத்ரி 


ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி,  தன்னோ மாகேஸ்வரி ப்ரசோதயாத்


நாள் 2


இரண்டாவது நாளில், தேவி கௌமாரி அல்லது ராஜராஜேஸ்வரி என்று வணங்கப்படுகிறார். மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட தேவியை ராஜராஜேஸ்வரியாக கரும்பு வில், மலரம்பு, பாசாங்குசம் ஏந்தியவளாய் அலங்கரிப்பார்கள்.பூஜை தொடங்குவதற்கு முன்பு மக்கள் அரிசி மாவில் கட்டா கோலம் வரைகிறார்கள். இரண்டாவது நாளில் ஜாஸ்மின் மற்றும் துளசி வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். புலியோதரை, புட்டு மற்றும் மாம்பழங்கள் பொதுவாக நைவேத்யமாக வழங்கப்படுகின்றன, ராக கல்யாணிக்கு இன்று ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.


கௌமாரி காயத்ரி


ஓம் சிகி வாஹனாய வித்மஹே, சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்


நாள் 3


தேவி மூன்றாம் நாளில் வராலி அம்பிகாய் அல்லது வராஹி என்று வணங்கப்படுகிறார்.  மகிஷாசுர வதம் செய்த தேவி சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருக்கும் கோலத்தில், கல்யாணி வடிவமாக அலங்கரிப்பார்கள்.அரிசி மாவில் (ரோஜா அல்லது தாமரை வடிவமைப்புகள்பரிந்துரைக்கப்படுகின்றன) அல்லது பூக்களைப் பயன்படுத்துவதன் மூலம் கோலம் வரைவது நல்லதாக கருதப்படுகிறது.

பூஜை செய்ய ஷென்பகம், சம்பங்கி மற்றும் மரிகோசுந்து சிறந்தவர்கள். சக்கரை பொங்கல் மற்றும் எல்லு போடி ஆகியவை நைவேத்யமாக வழங்கப்படுகின்றன. காம்போதி ராகத்தில் பாடல்களை இன்று பாடலாம்.


வாராஹி காயத்ரி


ஓம் மகிஷாத்வஜாய வித்மஹே,  தண்ட ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


நாள் 4


நான்காம் நாள் தேவி ஒரு லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறார்.  வெற்றித் திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கையை "ஜெய துர்க்கை' என்றும்; "ரோகிணி துர்க்கை' என்றும் அழைப்பர். சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களிலிருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று அவர்களுக்கு அருள் பாலிக்கும் கோலத்தில் வீற்றிருக்கிறாள்.அரிசி மாவில் பாடி கோலம் அல்லது படிகளின் வடிவத்தில் ரங்கோலி (அட்சடாயைப் பயன்படுத்துதல் - அரிசி, மஞ்சள் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை) சிறந்ததாகக் கருதப்படுகிறது.


தேவியின் சிலையை காட்டு மஞ்சள் (கஸ்தூரி மஞ்சல்) கொண்டு அலங்கரித்து, வாசனை எண்ணெய்களைப் பூசி ரோஸ் வாட்டர் தெளிக்கவும். ஜாதி மல்லி மற்றும் ரோஸின் மணம் தேவியை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது. கதம்ப சதம், தயிர் அரிசி, பச்சை பட்டாணி மற்றும் நிலக்கடலை சுண்டல் அல்லது எலுமிச்சை அரிசியை நைவேத்யமாக வழங்குங்கள்.தேவியைப் புகழ்ந்து பைரவி ராகத்தில் பாடல்களைப் பாடுங்கள்.


லக்ஷ்மி காயத்ரி


ஓம் பத்ம வாசின்யைச்ச வித்மஹே, பத்ம லோசனயைச்ச தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

நாள் 5


நவராத்திரியின் ஐந்தாம் நாளில், தேவி வைஷ்ணவி வடிவத்தில் வணங்கப்படுகிறார்.  துர்க்கை சுகாசனத்தில் வீற்றிருந்து, சும்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் அலங்கரிக்கப் படுகிறாள்.நீங்கள் அவளை மோகினி வடிவத்திலும் அலங்கரிக்கலாம்.


வங்காள கிராம் மாவைப் பயன்படுத்தி ரங்கோலி வரையவும்; பறவைகளை ஒத்த வடிவமைப்புகள் சிறந்தவை என்று கூறப்படுகிறது. பவாஜா மாலி, பரிஜாதம் மற்றும் முல்லை ஆகியவை இன்று பூஜைக்கு மிகவும் புனிதமானவையாக கருதப்படுகின்றன. வென் பொங்கல், வடகம், பயாசம் மற்றும் மொச்சை பயிர் சுண்டலை இன்று வழங்குங்கள். தேவியைப் புகழ்ந்து, ராக பந்துவராலியில் பாடல்களைப் பாடுங்கள், குறிப்பாக பஞ்சமாவாரனை கீர்த்தனை.


வைஷ்ணவி காயத்ரி


ஓம் ஷ்யாம வர்ணாயை வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்


நாள் 6


ஆறாம் நாள் இன்று, தேவி இந்திராணி வடிவத்தில் வணங்கப்படுகிறார், மற்றும் ஆலங்காரம் சாண்டி தேவியின் பாணியில் இருக்க முடியும்.  சர்ப்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகா தேவியாக தூம்ரலோசன வதத்திற்குரிய தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் அக்கமாலை, கபாலம், தாமரைப்பூ, பொற்கலசம் ஆகியவற்றைக் கொண்டவளாய், பிறையணிந்த தோற்றத்தில் அருட்காட்சி தருகிறாள்.சிவப்பு பட்டு பயன்படுத்தி சிலையை அலங்கரித்து, சிவப்பு கல் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கவும். கோலம் வரைகையில், வங்காள கிராம் மாவில் தேவியின் பெயரை எழுதுங்கள். பூஜைக்கான மலர்கள் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் - ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மற்றும் கும்கம் பூ ஆகியவை மிகவும் விரும்பத்தக்கவை. நீங்கள் பூஜைக்கு பரிஜாதத்தையும் பயன்படுத்தலாம். தேங்காய் அரிசி அல்லது எல்லு சாதத்தை இன்று வழங்குங்கள். நீலம்பரி ராகம் இன்று புனிதமாக கருதப்படுகிறது.


இந்திராணி காயத்ரி 


ஓம் கஜத்வஜாயை வித்மஹே,  வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்


நாள் 7


ஏழாம் நாள் தேவி இன்று அன்னபூரணியாகத் தோன்றுகிறார் என்று நம்பப்படுகிறது. சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்தபின், பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் தேவி பூஜிக்கப்படுகிறாள். இவளை "சாம்பவி' என்றும் அழைப்பார்கள்.கோலத்தை வரையவும், மஞ்சள் சபையர் ஆபரணங்களால் தேவியை அலங்கரிக்கவும் பல பயன்பாட்டு மலர்களால் அவள் சரஸ்வதி என்று வணங்கப்படுகிறாள். பூஜை செய்ய தாஜம்பூ, தும்பை மற்றும் மல்லிகை பயன்படுத்தவும்.

எலுமிச்சை அரிசி சிறந்தது என்றாலும், நீங்கள் இன்று வெள்ளைய் சாதம், கல்கண்டு சாதம் அல்லது சர்க்கரை பொங்கலையும் வழங்கலாம்.

சுண்டல் நைவேத்யத்திற்கும் வழங்கலாம்.

அன்றைய ராகம் பிலாஹரி.


சரஸ்வதி காயத்ரி


ஓம் வாக்தேவ்யை வித்மஹே, வ்ருஞ்சி பத்தின்யை ச தீமஹி தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்


நாள் 8


 எட்டாம் நாள்  இந்த நாளில், தேவி நரசிம்ஹி அல்லது துர்கா வடிவத்தில் வணங்கப்படுகிறார். ரகதபீஜன் என்ற அரக்கனைக் கொன்ற பிறகு, அவள் கருண மூர்த்தியாகத் தோன்றுகிறாள். தாமரை வடிவமைப்பில் ரங்கோலி வரைய மலர்களைப் பயன்படுத்துங்கள்.மரகத கற்கள் மற்றும் பச்சை பட்டு துணியைப் பயன்படுத்தி சிலையை அலங்கரிக்கவும்.ரக்தபீஜன் வதைக்குப்பின், கருணை நிறைந்தவளாய், அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கப்படுகிறாள். இந்தக் கோலத்தில் அஷ்ட சித்திகளும் புடைசூழ வீற்றிருக்கிறாள்.இன்று பூஜைக்கான மலர்களில் ரோஸ், சம்பங்கி மற்றும் மாகிஹாம் ஆகியவை அடங்கும். ஆஃபர் பால் சாதம் அல்லது பயாசன்னம் மற்றும் அப்பம் ஆகியவை நைவேத்யமாக உள்ளன. இன்று புன்னகவரலியில் பாடல்களைப் பாடுவது நல்லதாக கருதப்படுகிறது.


துர்கை காயத்ரி


ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்மஹே,  துர்கா தேவ்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்


நாள் 9


ஒன்பதாம் நாள் நவராத்திரியின் கடைசி நாள் சாமுண்டி தேவிக்கு. அம்பு, வில், அங்கூசம், சோளம் போன்றவற்றை லலிதா பரமேஸ்வரி வடிவத்தில் அலங்கரிக்கவும்.  கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாய், சிவசக்தி வடிவமாகிய காமேச்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றமாகும்.வாசனை பொடிகளைப் பயன்படுத்தி இந்த ஆயுதங்களின் வடிவமைப்புகளை வரைந்து, தேவியை வைர நகைகளால் அலங்கரிக்கவும்.

இன்று, தாமரை மற்றும் மரிகோசுண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி பூஜை செய்வது நல்லதாக கருதப்படுகிறது. எல்லு சதாம், கோண்டா கடலை சுண்டல் அல்லது அக்கராவடிசலை நைவேத்யமாக வழங்கலாம்.இன்று ராக வசந்தாவில் பாடல்களைப் பாடுவது நல்லதாக கருதப்படுகிறது.


சாமுண்டி தேவி காயத்ரி 


ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே,  சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்டா  ப்ரசோதயாத்

விஜய தசமி


நவராத்திரி பத்தாம் நாள் - அம்பிகை


கடைசியாக விஜயதசமி நாளன்று, அம்பிகை விஜயாவாக அருளாசி தருகிறாள். படிக்கோலம் போட்டு, ரோஜா, அரளி, மல்லி செம்பருத்தி பூக்கள் கொண்டு அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல்,  இனிப்புகள், வடை, சுக்கும் வெல்லமும் சேர்த்த கலவை, நீர்மோர் பால் பாயாசம், காராமணி சுண்டல் நிவேதனம் செய்யலாம்.  அன்னைக்கு உரிய திதி : தசமி.


விஜயா காயத்ரி


ஓம் விஜயா தேவ்யை வித்மஹே,  மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்


ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். இத்துடன் நித்தம் ஒரு சுண்டலால் நிவேதனம் செய்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி, அவற்றின் நன்மைகளை பெறலாம்.


முக்குண தேவியர்:


ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.


வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம்:


சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. ராமன் தேவிமந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் பார்வதி மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.


வெற்றிக்குரிய தசமி திதி:


எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.


இன்று தேவி விஜய வடிவத்தை தேவி எடுக்கிறாள். சிறப்பு பூஜைக்கு மல்லிகை மற்றும் ரோஜா பயன்படுத்தப்படலாம்,சர்க்கரை பொங்கல் மற்றும் பிற இனிப்புகளை நைவேத்யமாக வழங்கலாம்

நவராத்திரி பூஜையில் கன்னிகைகளையும் சுமங்கலிகளையும் சக்தியாக வழிபடுவது சிறப்பம்சமாகும். இரண்டு வயது முதல் பத்து வயது வரையுள்ள பெண்களை குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, சுபத்திரை, துர்க்கை என்ற பெயர்களில் பூஜிக்கிறோம். 

சுமங்கலிகளை அழைத்து பூஜை நிறைவு பெற்றதும், வெற்றிலைப் பாக்கு, மங்கலப் பொருட்களுடன், நைவேத்தியம் செய்த பிரசாதத்தையும் கொடுத்து உபசரித்து அனுப்ப வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று ஆயுத பூஜையும் செய்யப்படுகிறது. 


ஆயுதம் உபயோகிப்போர், படிப்பு, எழுத்து தொடர்புடையவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கருவிகளையும், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவற்றையும் பூஜையில் வைக்கிறார்கள். ஞானம் தரும் ஹயக்கிரீவரை முதலில் பூஜித்து, பின்னர் சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.

வெண்தாமரையில் அமர்ந்து வெள்ளாடை அணிந்து திருக்கரங்களில் அங்குசம், வில், வஜ்ரம், கமண்டலம், சுவடி, வீணை, ஸ்படிக மாலை ஆகியவற்றுடன் பளிங்கு மேனியளாய்த் திகழ்கிறாள் சரஸ்வதி.

சரஸ்வதி கிருஷ்ணனின் முகத்திலிருந்து தோன்றியவள் என பிரம்ம வைவர்த்தம் நூலும், சிவசக்தி என்று கூர்ம புராணமும் கூறுகின்றன.


சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி அஷ்டோத் திரம், சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதி வழிபாட்டு நூல்களைப் பாராயணம் செய்வர். அன்று புத்தகத்தைப் படிப்பதோ, ஆயுதங்க ளைப் பயன்படுத்துவதோ இல்லை. பூஜையில் வைக்கப்பட்ட கருவிகளை மறுநாள் விஜயதசமியன்று புனர்பூஜை செய்தபின்பே எடுத்துப் பயன்படுத்துவர்.


ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கிய தேவி பத்தாம் நாள் சிவனுடன் அர்த்தநாரியாகி விடுகிறாள் என்பது ஐதீகம்.


மகிஷாசுரனை அழிக்க பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் ஓருருவமாக துர்க்கா தேவியாக உருவெடுத்து, ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பத்தாம் நாள் மகிஷாசுரனை வென்று மகிஷாசுரமர்த்தினியாக- வெற்றியின் திருவுருவமாக அருள்பாலிக்கிறாள்.


விஜயதசமியன்று அரச குடும்பத்தினர் வன்னி மரத்தடிக்குச் சென்று, அம்மரத்தை வழிபட்டு, கோவில்களில் அம்பு போடும் உற்சவம் நடத்துவார்கள்.

பொதுவாக வன்னிமரம் துர்க்கா தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் வன்னிமர வழிபாடு துர்க்காதேவி வழிபாடாக நடத்தப்படுகிறது. வன்னி மரத்தைப் பூஜிப்பவர் களின் பாவங்கள் விலகும்; சத்ருக்கள் அழிவர் என்பது நம்பிக்கை. விஜயதசமியன்று புனர்பூஜை செய்து, வன்னி மரத்தை வணங்கி மகிஷாசுர மர்த்தினியை வழிபட்டு அவளருள் பெறலாம்.


துர்க்கையானவள் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் மகாலட்சுமியாய் அவதரித்து, சுக்லபட்ச அஷ்டமி திதியில் மகிஷனை வதம் செய்து, நவமியில் தேவர்கள் தன்னை வழிபட, விஜயதசமியன்று தேவர் களிடமிருந்து விடை பெற்று மணித்வீபம் செல்கிறாள்.

சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் துர்க்கை, தேவர்கள் தேஜஸ்ஸிலிருந்து தோன்றியவள் என்பதால் "ஸர்வ தேவதா' என்றும்; முக்குணங் கள் கொண்டவள் என்பதால் "திரிகுணா' என்றும் அழைக்கப்படுகிறாள்.

லட்சுமிதேவி பூலோகத்தில் அலர்மேலு மங்கையாகப் பிறந்து விஷ்ணு பெருமானாகிய திருப்பதி ஏழுமலையானை மணாளனாக அடையும் பொருட்டு, நவராத்திரி ஒன்பது நாட்களும் தவமிருந்து தன் விருப்பம் நிறைவேறப் பெற்றாள் என்பது புராண வரலாறு.


சரஸ்வதியும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் பிரம்மாவைக் குறித்து தவமியற்றி வழிபட்டிருக்கிறாள்.

விஜயதசமியன்று அனைவரும் தங்கள் குருவிற்கு வணக்கம் தெரிவித்து, குரு தட்சிணை அளிப்பது மரபு. வருடம் முழுவதும் வெற்றி பெற குருவின் அருளே பிரதானமானது என்பதை உணர்ந்து குருவை வணங்குவோம்.


ஜனமேஜய மன்னன் வியாச முனிவரிடம் நவராத்திரியின் மகிமையையும், அதைக் கொண்டாடும் வழிமுறைகளையும் கேட்ட போது, அவற்றை முனிவர் எடுத்துக் கூறினார்.

கன்னிகா பூஜை போது, குமாரியைப் பூஜிப்பதால் வறுமை நீக்கமும், பகைவர் வெற்றியும், ஆயுள் விருத்தியும், செல்வ வளர்ச்சியும் கிட்டும் என்றும்; திரிமூர்த்தி வழிபாடு தனதான்ய விருத்தி, புத்திரப்பேறையும்; கல்யாணி வழிபாடு கலைகளில் அபிவிருத்தியும் ராஜசுகமும்; ரோகிணியை பூஜிப்பதால் ரோக நிவர்த்தியும்; சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வ வளமும்; காளியைப் பூஜிப்பதால் பகைவர் நாசமும்; சாம்பவியைப் பூஜிப்பதால் போரில் வெற்றியும் வறுமை நீக்கமும்; துர்க்கையைப் பூஜிப்பதால் கொடிய பகைவர் கள் அழிவதோடு பேராற்றலும் பரலோக சுகமும்; சுபத்திரையைப் பூஜிப்பதால் மங்களங்களோடு, எண்ணங்கள் பலிதமாகும் பேறும் கிட்டும் 

இந்த ஒன்பது கன்னியரைப் பூஜிக்கும்போது, அந்தந்தப் பெயர்களுக்கு மூலகாரணமாக உள்ள பகவதியைத் துதித்து, அவரவர்க்குரிய சுலோகங் களைக் கூறி வழிபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


எங்கும் எல்லாவற்றிலும் பூமியாகவும் நதியாகவும் பிற ஜீவன்களாகவும் நிறைந்திருக்கும் அம்பிகையை வழிபட்டு வளம் பெறுவோம்

.

நவராத்திரியின் போது நிகழ்த்தப்படும் ஜெபம், கோஷங்கள் மற்றும் தியானம் ஆகியவை நம் ஆவியுடன் நம்மை இணைக்கின்றன. ஆவியுடன் தொடர்புகொள்வது நமக்குள் நேர்மறையான குணங்களைத் தூண்டுகிறது மற்றும் சோம்பல், பெருமை, ஆவேசம், பசி மற்றும் வெறுப்புகளை அழிக்கிறது. எதிர்மறை உணர்ச்சிகளின் வடிவத்தில் மன அழுத்தம் அழிக்கப்படும்போது, உருமாறும் ஒன்பது இரவுகளின் ஆழ்ந்த ஓய்வை நாம் அனுபவிக்கிறோம்

வெற்றிக்குரிய தசமி திதியும் வன்னிமரவழிபாடும்

விஜயதசமியில் வன்னிமரத்தை 27 முறை வலம் வர வருட முழுவதும் துன்பம் அனுகாது.


வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்தின் போது தமது ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.


விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.

வன்னிமரம் புகழ் பெற்ற சில சிவாலயங்களில் இருக்கிறது.


வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். மகிஷனை வதம் செய்ததால் ‘மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.


நான்கு வடிவங்களில் சக்தி:


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் 

(பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்), அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை ‘ஆதிபராசக்தி என்பர். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.


அம்பாள் வழிபாடு:


சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடும் முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.


வன்னிமரம்:


"மிகச்சிறிய கூட்டிலைகளைக் கொண்ட முள் நிறைந்த இலையுதிர் மரம் வன்னி"

பாலைவனத்தில் கூட பசுமையா வளரும் அற்புத சக்தியுள்ள மரம் வன்னி, மரம் முழுவதும் மருத்துவ பயனுடையது வன்னி.


வன்னிமர காற்று சஞ்சீவிக்காற்றுக்கு ஒப்பானது, வன்னிமரத்தடியில் வாசியோகம் பயில வாசிவசப்படும்.

சில கோவில்களில் ஸ்தல விருட்சமாக வன்னி இருப்பதைக் காணலாம், பழனி பங்குனி உத்திர தீர்த்த யாத்திரையில் வன்னி இலைக்கே முதலிடம், கொடுமுடி ரங்கநாதர் ஆலயத்தில் மிகப்பழமை வாய்ந்த வன்னிமரம் உள்ளது,


வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

பழனியில் ஸ்ரீலஸ்ரீ மானூர் சுவாமிகள் ஆலயத்தில் வன்னிமர விநாயகரோடு அமைந்துள்ளது.

விஜயதசமியில் வன்னிமரத்தை 21 முறை வலம் வர வருட முழுவதும் துன்பம் அனுகாது.


வன்னிஇலை காய்ச்சல் அகற்றும், சளியகற்றும், நாடிநடைகளையும் உடல் வெப்பத்தையும் கூட்டும்.

வன்னி மர இலை பட்டை காய் வேர் என சமூல பொடியை தினம் பாலில் தேனீர் போல் அருந்தி வர வாதம், கபம், சன்னிதோஷம், காணாக்கடி நஞ்சு(எந்த பூச்சி விஷம் என்றே தெரியாதது) சொறி ஆகியவை தீரும்.


வன்னிபட்டை பிசினோடு பொடித்து கசாயமாக குடித்துவர சுவாசநோய், பல்நோய்கள்,வாதகப சன்னியும் தீரும், அதிக நாள் சாப்பிடக் கூடாது, உடல் வெப்பம் மிகுந்து தலைமுடி உதிர வாய்ப்புண்டு, உடலுக்கு பலத்தை தரும், வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

வன்னி மர இலைகளை, வீடுகளில் பூஜையறையில், சட்டை பாக்கெட்களில் வைத்திருப்பது, காரிய வெற்றியடைய உதவும் என நம்பி வைத்திருப்பர், போரில் ஈடுபட செல்லும் வட நாட்டு வீரர்கள், போர்க்களம் புகுமுன், வன்னி மர இலைகளை பிரசாதமாக பெற்று செல்வர் என்பதை, சரித்திர நூல்களில் இருந்து அறிய முடிகிறது.


சாதாரணமாக கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர்.


शमी शमयतॆ पापं शमी शत्रु विनाशिनी ।

अर्जुनस्य धनुर्धारी रामस्य प्रियदर्शिनी ॥


ಶಮೀ ಶಮಯತೇ ಪಾಪಂ ಶಮೀ ಶತ್ರು ವಿನಾಶಿನೀ |

ಅರ್ಜುನಸ್ಯ ಧನುರ್ಧಾರೀ ರಾಮಸ್ಯ ಪ್ರಿಯದರ್ಶಿನೀ ||

శమీ శమయతే పాపం శమీ శత్రు వినాశినీ

అర్జునస్య ధనుర్ధారి రామస్య ప్రియదర్శినీ


Samii samayate paapam Samii satru vinaasinii

Arjunasya dhanurdhaari Raamasya priyadarsinii

இந்த மந்திரத்தை உச்சரிக்கவெண்டும்


Shami shamayate papam

Sami shatru vinashanam

Arjunasya dhanur dhari

Ramasya priya darshanaha


விஜயதசமியில் வன்னிமரத்தை 27 முறை வலம் வர வருட முழுவதும் துன்பம் அனுகாது.

இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.


முக்குண தேவியர்:


ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.


வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம்:


சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. ராமன் தேவிமந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் பார்வதி மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.


வெற்றிக்குரிய தசமி திதி:


எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.


Hindus are great worshippers of Nature. Even before they worshipped the Trinity and other deities, they had understood the significance of Nature. The Five Natural Elements (Space, Air, Fire, Water and Earth) are treated with veneration, as they are inevitable to the progress of the humanity and very indispensable in day-to-day life of mankind. Trees are well associated with human life. Even before some trees were regarded as Sthala Vrikshas (Sacred Trees of the Temple), those were worshipped by ancient people as they believed in Nature worship


நவராத்திரி புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் தமிழ் துதிகள்


மூன்று தேவியின் சிறப்புகள்


துர்க்கை: இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள். வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தியாவாள். வீரர்கள் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம்.

லட்சுமி: இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தியானவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

சரஸ்வதி: இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். வெண் தாமரையில் வீற்றிருப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி. அழியாத செல்வமான கல்வியை அனைவருக்கும் வழங்கும் சக்தியாக இவள் திகழ்கிறாள். இவளுக்கு கூத்தனூரில் தனியாகக் கோவில் அமைந்துள்ளது.


நவராத்திரி தோன்றிய கதை


ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும்

தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும்

அளித்தனர்.


துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற

பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.


சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை

 தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி, தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.

மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.

ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.


"சரஸ்வதி நமஸ்துப்யம்

வரதே காமரூபணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

ஸித்திர் பவது மேஸ்தா.'


ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள். நறுமணமுள்ள சந்தனம் , பூ (புஸ்பம்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம்,வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் தேவியை போற்றவேண்டும்.


தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எளிமையான நவராத்திரி ஸ்லோகங்கள்


நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.


துர்க்கா தேவி


ஓம் துர்க்காயை நம

ஓம் மகா காள்யை நம

ஓம் மங்களாயை நம

ஓம் அம்பிகாயை நம

ஓம் ஈஸ்வர்யை நம

ஓம் சிவாயை நம

ஓம் க்ஷமாயை நம

ஓம் கௌமார்யை நம

ஓம் உமாயை நம

ஓம் மகாகௌர்யை நம

ஓம் வைஷ்ணவ்யை நம

ஓம் தயாயை நம

ஓம் ஸ்கந்த மாத்ரே நம

ஓம் ஜகன் மாத்ரே நம

ஓம் மகிஷ மர்தின்யை நம

ஓம் சிம்ஹ வாஹின்யை நம

ஓம் மாகேஸ்வர்யை நம

ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ?ம்யை நம

ஓம் வரலெக்ஷ?ம்யை நம

ஓம் இந்த்ராயை நம

ஓம் சந்த்ரவதனாயை நம

ஓம் சுந்தர்யை நம

ஓம் சுபாயை நம

ஓம் ரமாயை நம

ஓம் ப்ரபாயை நம

ஓம் பத்மாயை நம

ஓம் பத்மப்ரியாயை நம

ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

ஓம் சர்வ மங்களாயை நம

ஓம் பீதாம்பரதாரிண்யை நம

ஓம் அம்ருதாயை நம

ஓம் ஹரிண்யை நம

ஓம் ஹேமமாலின்யை நம

ஓம் சுபப்ரதாயை நம

ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம

ஓம் சாவித்ர்யை நம

ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

ஓம் ஸ்வேதா நநாயை நம

ஓம் ஸுரவந்திதாயை நம

ஓம் வரப்ரதாயை நம

ஓம் வாக்தேவ்யை நம

ஓம் விமலாயை நம

ஓம் வித்யாயை நம

ஓம் ஹம்ஸ வாகனாயை நம

ஓம் மகா பலாயை நம

ஓம் புஸ்தகப்ருதே நம

ஓம் பாஷா ரூபிண்யை நம

ஓம் அக்ஷர ரூபிண்யை நம

ஓம் கலாதராயை நம

ஓம் சித்ரகந்தாயை நம

ஓம் பாரத்யை நம

ஓம் ஞானமுத்ராயை நம


தமிழில் அம்பாள்


காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

பொன் பொருள் எல்லாம்

வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

என் அன்னை நீயே அம்மா

மங்களம் வழங்கிடும் மகாசக்தியே

மங்கலத் தாயே நீ வருவாயே

என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே

எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

பயிர்களில் உள்ள பசுமையில்

கண்டேன் பரமேஸ்வரி உனையே!

சரண் உனை அடைந்தேன்

சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

அரண் எனக் காப்பாய்

அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!


லட்சுமி


செல்வத் திருமகளே! மோகனவல்லியே

எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

எண் கரங்களில் சங்கு சக்கரம்

வில்லும் அம்பும் தாமரை

மின்னும் கரங்களில் நிறைகுடம்

தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!

வரத முத்திரை காட்டியே

பொருள் வழங்கும் அன்னையே!

சிரத்தினில் மணி மகுடம்

தாங்கிடும் சிந்தாமணியே!

பல வரம் வழங்கிடும் ரமாமணியே!

வரதராஜ சிகாமணியே!

தாயே! தனலட்சுமியே!

சகல வளமும் தந்திடுவாய்


சரஸ்வதி


கலைவாணி நின் கருணை தேன்மழையே

விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி

இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

Friday, September 3, 2021

குருவின் சிறப்பு

 *மன்னித்தல்  என்பது  இறைவனின் அகராதியிலேயே  கிடையாது  என்ற  கசப்பான  உண்மையை  நாம்  அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டும்.*


***********************************************


  கல்லாப்  பிழையும்  கருதாப்  பிழையும்  

கசிந்து  உருகி நில்லாப்பிழையும்  நினையாப்பிழையும்  நின்ஐந்தெழத்தை 

சொல்லாப்  பிழையும்  துதியாப்பிழையும்  தொழாப்பிழையும்

எல்லாப்  பிழையும்  பொறுத்தருள்வாய்

கச்சி  ஏகம்பனே .


               --பட்டினத்தார் 


          இந்த  பாடலை  நம்மில்  பெரும்பாலோர்   அடிக்கடி  பாடி  இருப்போம். அதுவும்  பக்தி  மனநிலையில்  பாடி  இருப்போம். 


       ஆனால்  ஒரு நாள்  ஈஸ்வரன்  என்னை  பார்த்து  திட்டுவது  போல்  உணர்ந்தேன் .


  ஈஸ்வரன்  கேட்கிறார்  :-


  நான்  ஏன்டா  கல்லா பிழையை  பொருத்துக்கனும் ?


       நீ  உண்மையையும் ,  நீதியையும்,  ஆன்மாவை பற்றியும்   கற்று தெரிந்து  கொள்ள வேண்டும்  என்பதற்காக  தான்  உன்னை  பூமிக்கே  அனுப்பினேன். 


       நீ  என்னடான்னா இங்கு  வந்து  ஒழுங்காக குருவை நாடி  தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு  வந்து   " கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் ... பொருத்து அருள்வாய்  "  என்று  பிரார்த்தனை  செய்கிறாய் .


 ஒரு  உண்மையை  சொல்கிறேன்  :-


 தானமும்,   தவமும்,  பூமியில் மட்டும் தான் செய்ய முடியும்.   பூமியில் வாழும் காலத்தில் நீ தானம்,  தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில்  இருக்கும்  போது தானம், தர்மம்  செய்ய வேண்டும்  கடவுளே என்று  என்னிடம்   பிரார்த்தனை  செய்தால்;  

         நான் என்ன சொல்வேன்;  அடப்பாவி  அதற்கு  தானே  உனக்கு  ஸ்தூல தேகம் கொடுத்து   பூமிக்கு  அனுப்பினேன்.   நீ என்னடா  என்றால்  அங்கு  ஒழுங்கா  எதையும்  கற்காமல் , தானமும்,  தவமும்  செய்யாமல் வாழ்ந்து விட்டு  இப்பவந்து  கேட்கிற.       


சரி என்ன பன்றது   மறுபடியும்  பூமியில்  போய்  பிறந்து  முறையாக  குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும்,   தானம்  தவமும்  செய்து  வாழ்ந்து விட்டு  வா  என்று  தான்  சொல்வேன். 


         மேல்  உலக வாழ்கை  என்பது   பூலோக  வாழ்க்கையின் போது செய்த  தானம்,  தவம், மற்றும்  பெற்ற  ஞானம்  போன்றவற்றிற்கான   பலனை  அனுபவிக்கிற  வாழ்கை  ஆகும். 


       " பதவி பூர்வ  புண்ணியானாம் "


   பூமியில்  வாழம் போது  100 அஸ்வமேத யாகம்  செய்தால்,  இறந்த பிறகு  சொர்க்கத்திற்கு  சென்றால்  அங்கு  இந்திர பதவியே  கொடுக்கப்படும்  என்பது  தான்  சாஸ்திரம்  ஆகும். 


       அதனால்  தான்  மகாபலி  அரசன்  100 அஸ்வமேத யாகம்  செய்தான்  என்பது  உனக்கு  தெரியாதா?

 

       ஒருவேளை  உனக்கு  சொர்க்கம் போன்ற  மகிழ்ச்சி  மற்றும்  பதவிகள்  மீது  எல்லாம்  பற்று இல்லை  என்றால்   முக்தி  அடைய வேண்டும்  என்பது  தான்  விருப்பம்  என்றால்  ;


      நீ  ஒரு  குருவை சரண் அடைந்து   ஸ்தூல தேகம் ,  சூட்சும தேகம்,   காரண தேகம்,   மகா காரண தேகம்,   போன்ற  உண்மைகளையும், பசு பதி பாசம்  போதிக்கிற   சைவசித்தாந்த கல்வியை  கற்க வேண்டும். 96 தத்துவங்கள் பற்றியும் ,   தசகாரியம் பற்றியும்  கற்க வேண்டும். 


      அப்படி  கற்றால்  தான்   அதன் படி வாழ்ந்து   ஸ்தூல தேகம்,  மனோதேகம்  போன்றவற்றில்  இருந்து  எல்லாம்   விடுபட்டுத்தான்   ஜீவன் முக்தி  நிலையை அடைய முடியும். 


     இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பது  என்பது முக்தி  பிராப்தத்தை  விரும்பும்   மனிதனுக்கு  இன்றியமையாதது  ஆகும். 


       இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பதற்காக  ஒருவன்  பிச்சை எடுத்தாலும்  தவறு  இல்லை  என்று 

 " வெற்றி வேற்கை  "  என்ற  நூலின்  மூலம்  உலகுக்கு  சொன்னேன் .


  " கற்கை  நன்றே  கற்கை நன்றே 

    பிச்சை  புகினும்  கற்கை  நன்றே "


பிச்சை  எடுத்தாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிடா   என்று  சொன்னல் ;  நீ  என்னடா என்றால்   " கல்லாப் பிழையும்  பொருத்து  அருள்வாய்  "  என்று  பிரார்திக்கிறாய்.


        சொல் பேச்சை  கொஞ்சம் கூட கேட்க மாட்டுங்கிற !!


        நீ  அப்படி  குருவை  நாடி  சென்று  கல்வி  கற்றாலும்   அந்த  கல்வி  அவ்வளவு  லேசில்  உன்  மனதில்  தங்கி விடாது .   அது  உலக மயக்கங்களால்   மறைந்து  மறந்து  போய்விடும் .


     அதனால்  தான்  சிவ தீட்சை பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும்  கற்ற கல்வியை  அசை போட  வேண்டும்  என்று  அறிவுருத்தினேன் . 


   " காலையும் மாலையும்  நான்மறை 

ஓதா அந்தணர்  என்போர்  அனைவரும் பதரே "


        -- வெற்றி வேற்கை 


 மேலும்  ஒளவையார்   வாக்கின்  வழியாகவும்    கல்வி  என்பது  மனப்பழக்கம்  என்று  அறிவுருத்தினேன். 


 "  சித்திரமும்  கைப்பழக்கம் ,   செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு  கல்வி   மனபழக்கம்  " 


கற்ற  சைவசித்தாந்தம்  உண்மைகளை  அவ்வப்போது படித்து  வர வேண்டும். அதை  நன்றாக மனதிற்கு  பழக்கப்படுத்திவிட  வேண்டும். 


        அப்போது தான்  அதன்படி  நடக்க, வாழ ,   உன் மனம்  ஆயத்தம்  ஆகும். 


அதனால் தான்  "ஓதா  கல்வி  கெடும் "  என்றேன். 


      ஒருமுறை  படித்துவிட்டால்   எல்லாம் உன் மனம்   சைவசித்தாந்தம்  நெறிப்படி வாழ   தயாராகிவிடாது.     மீண்டும் மீண்டும்   தொடர்ந்து கற்று  அதனுடனேயே பயணித்து  அதனுடனேயே கலந்து  அதுவாகவே உன் மனம்  மாறிவிட வேண்டும். 


      அப்படி பட்ட  நிலையை  அடைந்த பிறகு  தான்  ஸ்தூல தேகம்,  மனோதேகத்தை எல்லாம்   விட்டு  விலகி சென்று  சத்தான ஆத்மாவை  மகா காரண தேகத்தை  அடைய முடியும். 


     இப்படி  இருக்க  நீ  என்னடா  என்றால்   இந்த  பட்டினத்தாரின்  ஒரு   பாடலை  பிடித்து  கொண்டு    அடிக்கடி  என் முன்  வந்து   "  கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்  .. "   என்று  வேண்டுகிறாய். 


        கல்லாப் பிழையை   எல்லாம்  ஈஸ்வரனாகிய  நான் பொறுத்துக் கொண்டு   திடீர்  என்று  உனக்கு  முக்தி நிலையை  கொடுத்தாலும், அது  முக்தி  என்று  உனக்கு  தெரியாது.   உன்னால்  அதை  உணர  முடியாது. 


       அதனால்  முட்டாள் தனமாக என் முன்  வந்து  கல்லா பிழையும்   கருதாப் பிழையும் ..   பொறுத்து அருள்வாய்   என்று  வேண்டாதே.


      2010 ம்  ஆண்டு  என்  கோவிலுக்கு  வந்து   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை  செய்தாய்.  சரி காலம்  போக போக நீ கல்வி  கற்றுக்கொள்ளலில்  ஆர்வம்  செலுத்துவாய்   என்று  பார்த்தேன் ; 


         ஆனால்   நீயோ   2015 ம்  ஆண்டும்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை செய்தாய் .


        சரி போகட்டும்  இனியாவது   சைவசித்தாந்தம்  உண்மைகளை  கற்பதில்  கவனம்  செலுத்துவாய்  என்று  பார்த்தால்  நீயோ   2021 ம்  ஆண்டும்   என்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்  கல்லா பிழையும் கருதாப் பிழையும்    என்று பிரார்த்தனை செய்கிறாய் . 


 ஒரே பல்லவியையே   ஆயுள்  முழுவதும்  பாடுகிறாய்.   அதனையும்  உன்னை போல்   அறிவிலியாட்டம்   என்னையும்  கேட்க சொல்கிறாய். இது நியாயமா  என்று  சற்று  யோசித்துப் பார். 


      இந்த  ஆண்டு  கற்க வில்லையா  என் கோவிலில் வந்து  இந்த  பாடலை பாடிவிட்டு  அடுத்த  முறை  வரும் போது   கற்றுகொண்டு  வருகிறேன்  இறைவா   என்று  நீ  சொன்னால்  அது  நல்ல பிள்ளைக்கு  அழகு .  


        அதனால   சும்மா  ஓப்பி அடிச்சு  ,   இந்த  பாடலை பாடியே   பஜனை  பண்ணிட்டு  போய்டலாம்   கடவுள்  நமக்கு  முக்தி  கொடுத்து விடுவார்  என்று  என்னுகிறாயா !!


          நாட்டில்  நிறைய  அடியார்கள்  இப்படித்தான்  திரிகிறார்கள் .  


         நீயாவது  பரவாயில்லை   வேறு  ஒரு   முருகன் அடியார்    இருக்கிறான் .  அவன்   அடிக்கடி  முருகன் கோவிலுக்கு  சென்று  


 " ஏது பிழை  செய்தாலும்  ஏழையனுக்கு இறங்கி  தீது  புரியாத தெய்வமே  " 


 என்று  பாடுகிறான். 


          பக்தர்களாகிய  உங்களுக்கு  எல்லாம்  ஒன்றை  தெளிவாக  சொல்லி கொள்கிறேன்.   ஏது பிழை  செய்தாலும்   பொருத்து கொண்டு  தீது செய்யாதவர்கள்  மூவர்  மட்டும்  தான். 


     1.  அம்மா 

     2.  அப்பா 

     3.  குரு 

இந்த   மூவர்  மட்டும் தான்  தீது புரிய மாட்டர்கள்.  


மற்றபடி  தெய்வங்கள்  எல்லாம்   நீதி  பரிபாலனம்  செய்யும்  அதிதேவதைகள்  ஆகும். 


       அந்த  நீதி படி  அவரவர்களுக்கு  தண்டனையும்  நன்மையும்  கிடைக்கும் படி  நவகிரகங்களுக்கு    கட்டளை இட்டு   உலகை  பரிபாலனம் செய்து  வருகிறோம் .


       எனவே   ஏது பிழை  செய்தாலும்  எல்லாம்   தண்டனை  கொடுக்காமல்  விட்டு விட முடியாது. 


          சிவ பக்தனான   ராவணன்   நிறைய  பிழைகள்  செய்தான் .  தேவர்களோ   சிவனான  என்னிடம்  வந்து  முறையிட்டனர்.   


 நானோ  என் பக்தனை நானே  தண்டித்தல்   முறையாகாது .    அதனால்  விஷ்ணு விடம்  சென்று  பிராத்தியுங்கள் .    அவரால்  ராவணனை  தண்டிக்க முடியும்   என்று  நான்  ஐடியா  கொடுத்தேன் .


         ராவணன்  என் பக்தன்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன்  !!  சற்று  யோசித்துப் பாருங்கள்.  


        நாளாயினி  போன ஜென்மத்தில்  சூரியனையே  உதிக்காதபடி  செய்தால் ;   அதற்கு  தண்டனையாக  மறு ஜென்மத்தில்   பாஞ்சாலியாக  பிறந்து  கஷ்டப்பட்டால்.     அவள்  என்னை  கும்பிட்டால்  என்பதற்காக  அவளது  தவரை மூடி மறைத்து  தண்டிக்காமல்  விட்டேனா  என்ன !


          திருதிராஷ்டிரன்  போன ஜென்மத்தில்   100   அன்ன பறவைகள்  கறியை  சாப்பிட்டான்  அந்த  பாவம்  பலனாக  அடுத்த  ஜென்மத்தில்  கண் தெரியாத  திருதிராஷ்டிரனாக   பிறந்தான் .     அவன்   என்னை  கும்பிட்டான்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன். 


        தசரதன்   ஒரு  அப்பாவி  மனிதனை  கொன்றான்  .  அந்த  பாவத்துக்கு   தண்டனையாக  தான்  சாபம்  பெற்று  மாண்டான்.   என் பக்தன்  என்பதற்காக  அவனது  சாபம்  பலிக்காமல் போகும் படியா  செய்தேன்  ;  இல்லையே .


        இதில் இருந்து  எல்லாம்  நீங்கள்  தெரிந்து கொள்ள  வேண்டியது  என்ன ?   சர்வேஸ்வரனாகிய   நான்   நீதி தவறாதவன்  ஆவேன். என் பக்தனே ஆனாலும் தண்டிப்பேன் .


       அதனால்   மனிதர்களாகிய  நீங்கள்   தெய்வங்களாகிய   எங்களிடம்  வந்து  


    "  ஏது  பிழை செய்தாலும்  தீது  புரியாத  தெய்வம் "   என்று  சொல்லி  எங்களுக்கு  ஐஸ்  வைக்காதீர்கள் .    இதற்கு  எல்லாம்  மயங்குகிறவர்கள்   அல்ல  தெய்வங்கள். 


      "  எல்லா பிழையும்  பொருத்து  அருள்வாய்  "   என்று  பிழை செய்யும்  மனிதர்களாகவே  இருப்போம்  நீ தான்  பிழையை  பொருத்து  அருள வேண்டும்    என்பது போல   பிரார்த்தனை    செய்யாதீர்கள்.   


    தெய்வங்களின்  இயல்புகளையும் ,  அவர்களின் கடமைகளையும்  புரிந்து கொள்ளுங்கள் .     அப்போது  தான்  சரியான  முறையில்  நியாயமான முறையில்  பிரார்த்தனை  செய்வீர்கள் .


      எப்போதும்  தெய்வங்களிடம்  இவ்வாறு  பிரார்த்தனை  செய்யுங்கள்  :-


    " பிழை செய்யாமல்  தடுத்தருள்வாய்  "  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள் .   


    " நண்பனாய்  இருந்து  பிழைகளை  சுட்டி காட்டி  திருத்துவாய்  "  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள். 


    " அகத்தூய்மை  செய்வதில்  பேர் உதவி புரிவாய் "  என்று  பிரார்த்தனை செய்யுங்கள்.


        இவ்வாறு   ஈஸ்வரன்  என்னுள்  இருந்து   எனக்கு  உணர்த்தினார்.   


        ஆன்மீகவாதிகளான  ,  பக்தர்களான   நாம்   இந்த  புரிதல் உடன்  இருந்தால் தான்   வருங்காலத்தில்   நாம்   பிறருக்கு  உபதேசிக்கும் போது சரியான  பாதையை  காட்ட முடியும். 


              எனவே  இதனை மனதில்  கொண்டு  ஆக்க பூர்வமாக  பிரார்த்தனையை  செய்து  இறை அருளை  பெற முயல வேண்டும். 


       கல்லாப் பிழையும்   என்று  இருக்கிறதா ;   இனி மேலாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிக்க  முயல வேண்டும்.    


         அதனால்  இனி  கல்லா பிழையும்  என்ற  பேச்சே  நம்  வாழ்வில்  இருக்க கூடாது.  


     கருதா பிழையும்   என்று  இருக்கிறதா ;


               நம்முள்ளே  ஆன்மாவான சத்து சித்து ஆனந்தமான  சச்சிதானந்தம்  இருக்கிறது.   அதனை அடிக்கடி  கருத வேண்டும்.  நினைக்க வேண்டும்.   அதற்கு  வழி  என்ன  என்றால் ;    ஆன்மீக வாதிகள்  அடிக்கடி

" சச்சிதானந்தம்  "  என்று  சொல்லுங்கள்.  


       இப்படி   சச்சிதானந்தம்  என்று  சொல்லி  சிந்தித்து  கொள்கிற  முறையை  கடைபிடித்தோம்  என்றால்  தானாக  ஆன்மாவானது ஈஸ்வரனை  கருத ஆரம்பித்துவிடுவோம் .    இதனால்  கருதா பிழை  நம் வாழ்வில்  செய்ய மாட்டோம். 


    ஐந்து எழத்தை  சொல்லா  பிழையும் 

என்று  இருக்கிறதா ;


   உணவு  சாப்பிடும்  போதும்  "நமசிவாய வாழ்க

நமசிவாய வாழ்க  "   என்று  சொல்லி விட்டு  சாப்பிடுகிற  பழக்கத்தை  ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . மற்ற அடியார்களிடம் பேசும்போதும் நமசிவாய வாழ்க என்று சொல்லி விட்டு பேசுங்கள்


         இதனால்  நமசிவாய  என்ற  பஞ்சாட்சரத்தை   சொல்லாத  பிழை  நம்  வாழ்வில்  செய்ய  மாட்டோம். 


   துதியா பிழையும்  என்று  இருக்கிறதா ;


      சர்வேஸ்வரனை  துதிக்க  நமக்கு  தெரியவில்லையா   அல்லது  துதிக்க  நேரம்  இல்லையா   இதற்கு  தீர்வாக  நமது  செல்போனில்   சர்வேஸ்வரனை  துதிக்கின்ற     பாடலை  பதிவேற்றிக் கொள்ள வேண்டும்  .    அதனை  அலாரம்  டோனாக  வைத்து கொள்ள வேண்டும் . 


       காலையில்  எழும் போது   இந்த  அலாரம்  டோனை  கேட்டு கொண்டே  எழுந்து கொள்ள வேண்டும்  . 

 இதனால்   தானாக  நமது  உள்மனது  ஆனது  துதியை   உள்வாங்கிக் கொள்ளும்   தன்மையை  பெற்றுவிடும் .


      இதனால்   துதியா பிழை  என்ற  தவறு  நம்  வாழ்வில்  நடக்காது .  


     தொழா பிழை  என்று  இருக்கிறதா :-


           நமது  வீட்டு வாசலின் மேல் பகுதியில்  ஜோதிர் லிங்கம்  புகைப்படத்தை  மாட்டி வைத்து  விடுங்கள்.   அல்லது  உங்களுக்கு  பிடித்த  சதாசிவ மூர்த்தி  புகைப்படத்தை  மாட்டி  வைத்து  விடுங்கள். 


      தினமும்  வீட்டில்  இருந்து  வெளியே  கிளம்பும் போது    வாசலுக்கு  மேல் உள்ள  சதாசிவ மூர்த்தி படத்தை  தொட்டு   தலைக்கு மேல் கை வைத்து தொழுது விட்டு  செல்லுங்கள்.   இதனை  ஒரு  பழக்கமாக  வைத்து  கொள்ளுங்கள்.    


         இதனால்  நமது  கைகள் தலைக்கு  மேல் தூக்கி சாமியை  தொழுத  பலன் கிடைக்கும்.   இதனை  கடைபிடிப்பதால்    தொழா பிழை    என்ற  தவறில்  இருந்து  நாம்  விடுபட்டு  விடுவோம். 


            இப்படியாக  ஆன்மீகவாதிகளான ,   பக்தர்களான  நாம்  அனைவரும்  இனி  

            1.  கல்லா பிழை ,   

            2.  கருதா  பிழை ,

            3.   ஐந்து எழத்தை  சொல்லா பிழை, 

            4.   துதியா பிழை ,

            5.   தொழா பிழை .


 ஆகிய  ஐந்து  பிழைகளை  செய்யாது  வாழ்ந்து   சிறந்த  பக்தர்களாக திகழ்ந்து  இறையருளை  பூரணமாக பெற்று  வாழ்வோம்  .     


        சர்வேஸ்வரன்   எதிர்பார்ப்பதும்   இதைத்தான்.   ஏதாவது  ஒருவகையில்   இந்த  பிழைகளை  செய்யாது  வாழ  முயற்சி  எடுத்து கொள்கிறானா  என்று  தான்   பார்க்கிறார்.


 *நமசிவாய வாழ்க.*

Tuesday, July 13, 2021

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில் ஸ்தல வரலாறு

#காஞ்சி #காமாக்ஷி #அம்மன் #கோயில் :-

உலகத்தின் மோட்சபுரிகளாக விளங்கும் அயோத்தியா, மதுரா, மயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா போன்ற ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாகவும், அவற்றில் மத்தியமானதாகவும் விளங்குவது காஞ்சி நகரமாகும். இந்த மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சியில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் உள்ளது. 

இந்த சிறப்பு மிக்க காஞ்சியின் மத்தியில் ஜகன்மாதாவான காமாட்சி அம்பாள் கருணை வடிவாக பத்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது மிகவும் சிறந்தாகும்.

அம்பாள் உட்காந்து இருக்கின்ற ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகியோர் நான்கு கால்களாகவும், சதாசிவன் மேல் பலகையாகவும் இருக்க அதன் மேல் அம்பாள் பத்மாசனம் பூண்டு கருணை வடிவாக அமர்ந்திருக்கிறாள். 

அம்பாள் வீற்றிருக்கும் அந்த மண்டபம் காயத்ரி மண்டபமாகும். இங்கு காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரமும் (எழுத்து) 24 தூண்களாக உள்ளது. இந்த காய்த்ரி மண்டபத்தை வைத்துதான் அம்பாள் இங்கு வந்தது கணக்கிடமுடியாத காலம் என்று கூறுகின்றனர்.

காமாட்சி அம்பாள் கோயில் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. காஞ்சிபுரத்தில் காமாட்சியே அகிலமுமாக இருக்கிறாள். "ஏகோ விஷ்ணுகோ: த்விதா சம்புகோ: திர்தா சக்திகி'' இதன் இந்த சமஸ்கிர்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களிலும் காமாட்சியே உற்சவ மூர்த்தி ஆவாள்.

இங்கே காமாட்சி அம்பாள் மூன்று சொரூபியாக உள்ளாள். பத்மாசனத்தில் சாந்த சொரூபியாகவும், எதிரில் ஸ்ரீ சக்கரத்தில் எந்திர சொரூபியாகவும், பக்கத்தில் பிலாசாகத்தில் காரண சொரூபியாகவும் உள்ளாள். இங்குள்ள ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

#அம்பாளின் #திருக்காட்சி : 

காமாட்சி அம்பாள் பத்மாசனத்தில் நான்கு கைகளோடு அமர்ந்து அருள்பாலிக்கிறாள். மேல் வலது கையில் பாசம் (கயிறு), இடது கையில் அங்குசம், கீழ் வலது கையில் 5 புஷ்பங்களோடும், கீழ் இடது கையில் கரும்பு வில்லோடும் காட்சி அளிக்கிறாள்.
உற்சவ காமாட்சி நடுவில் அம்பாளும், வலது மற்றும் இடது பக்கத்தில் சரஸ்வதியும் லட்சுமியும் இருக்கிறார்கள். 

#பங்காரு #காமாட்சி : 

காஞ்சியை முகலாய மன்னன் போரிட்டபோது, அவன் எடுத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக முழுவதும் தங்கமாக இருந்த பங்காரு காமாட்சியை பத்திரமாக தூக்கி சென்று, அதனை உடையார்பாளையத்தில் வைத்தார்கள். தற்போது தஞ்சாவூரில் பங்காரு காமாட்சி இருந்து அருள்பாலிக்கிறார். 

#நாபி #ஸ்தானம் (#சந்தான #ஸ்தூபி): 

இங்கு மேலும் ஒரு சிறப்பு நாபிஸ்தானம் ஆகும். அம்பாளின் தாட்சாயினியின் தொப்புள் (நாபி) (ஒட்டியாணம்) விழுந்த இடமாகும். இந்த காயத்ரி மண்டபத்திலுள்ள 24 தூண்களில் ஒரு தூணில் இந்த நாபி உள்ளது. இந்த தூணிற்கு பெயர் சந்தான ஸ்தம்பம் என்று பெயர். 

இந்த இடத்தில் தரசத மகாராஜா வந்து புத்ரகாம இஷ்டி யாகம் செய்து அதன் பின்தான் ராம லட்சுமணர் பிறந்தார் என்று புராணம் கூறுகிறது. மேலும் ராம லட்சுமணருக்கு காமாட்சி அம்பாள்தான் குலதெய்வம் என்பது அயோத்தியிலுள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

இன்றும் பக்தர்கள் வந்து தூணை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

#அரூபலட்சுமி
-#சொரூபலட்சுமி: 

மகா விஷ்ணு பாற்கடலில் இருக்கும்போது கிண்டலாக லட்சுமி கருப்பு என்று கூற பெருமாள் கோபம் வந்து சொரூபமே இல்லாமல் இரண்டாக பிளந்து கூன் விழுந்து காணப்படுவாய் என்று சாபம் கொடுக்கிறார்.

அந்த சாப விமோச்சனம் வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வீற்றிருக்கும் காயத்ரி மண்டபத்தில் தபஸ் இருக்கிறாள். பிறகு லட்சுமி தேவி சாப விமோச்சனம் நீங்கி சொரூப லட்சுமியாக நின்றபடி கைகூப்பி (பத்தாஞ்சலியா) வணங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். 

இதுபோன்று நின்ற கோலம் வேறு எங்கும் காண இயலாது. இங்கு வரும் பக்தர்கள் லட்சுமி தேவி தபஸ் செய்து எப்படி பாப விமோச்சனம் பெற்றாரோ அதுபோல தாங்கள் குங்கும பிரசாதம் வாங்கி அரூப லட்சமி மீது சாதி பேதமின்றி ஆண் பெண் பாகுபாடின்றி அனைவரும் தாங்களே தொட்டு குங்குமம் பூசி தாங்கள் செய்த பாபத்திற்கு விமோச்சனம் வேண்டுகின்றனர். 

வேறு எந்த கோயிலிலும் சுவாமி விக்ரகங்களை பக்தர்கள் தொடமுடியாது. இங்கு இது தனி சிறப்பாகும். இவ்வாறு அம்பாள் கைகூப்பி நின்ற கோலத்தை மகாவிஷ்ணு திருட்டுத்தனமாக மறைந்திருந்து பார்க்கிறார்.

ஆகவே அவருக்கு திருக்கள்வர் என்றும், ஆதிவராக பெருமாள் என்றும் பெயர் என்று 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் இது குறித்து கூறியுள்ளது. வைஷ்ணவர்கள் இன்றும் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். 

#அன்னபூரணி : 

அம்பாள் சன்னதியைவிட்டு வெளியே வந்தால் காசி அன்னபூரணி ஒரு கையில் அன்ன பாத்திரத்துடனும், ஒருகையில் கரண்டியுடனும் காட்சி தருகிறார். அன்னபூரணியை தரிசித்துவிட்டு அதன் அருகிலுள்ள பிட்ச துவாரத்தில் "பவதி பிட்சாந்தேகி'' அதாவது நிரந்தரமாக உணவு கிடைக்க பக்தர்கள் வழிபடுகின்றனர். 

#சரஸ்வதி : 

மேலும் அங்கே அஷ்ட புஜங்களுடன் அம்பாளின் மந்திரினி என்றும் மாதங்கி என்றும் ராஜ சியாமளா என்றும் அழைக்கப்படும் சரஸ்வதி தேவியார் வீற்றிருந்து கல்விச்செல்வங்களை வழங்கி வருகிறார். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சரஸ்வதி சன்னிதிக்கு வந்து வழிபட்டு கல்விச் செல்வங்களை பெற்றுய்கின்றனர். 

சரஸ்வதி சன்னிதிக்கு அருகே 1944ல் மகா பெரியவர் அம்மனின் பாதுகையை பங்காரு காமாட்சி ஞாபகர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அதற்கு இன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. 

#தர்மசாஸ்தா : 

தேவியை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் தர்ம சாஸ்தா பூர்ணா, புஷ்கலா என்ற இரு மனைவியருடன் காட்சிதருகிறார். தமிழகத்தை ஆண்டு வந்த கரிகாலச்சோழன் இங்கு வந்து இங்குள்ள தர்ம சாஸ்தாவிடம் பூச்செண்டு வாங்கி சென்று இமயமலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதாக புராணம் கூறுகிறது. 

#ஆதிசங்கரர் : 

ஆதிசங்கரர் பல இடங்களுக்கு சென்று மடங்களை ஸ்தாபித்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரம் வந்தார். இங்கு வந்து காமகோடி பீடம் ஏற்படுத்தி இங்கேயே சர்வஞ்ன பீடம் (முக்தி) அடைந்து அங்கேயுள்ள பிலாகாசத்தில் அம்மனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார். 

அவர் வருகை தந்தபோது ஆதி காமாட்சி அம்பாள் மிகவும் உக்கிரமாக இருந்தார்.அப்போது ஆதிசங்கரர் வந்து ஸ்ரீ சக்கரத்தை அவருடைய கையாலேயே உருவாக்கி பூஜை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார்.

இங்கு அம்பாளுக்கு எந்த உற்சவம் நடந்தாலும் ஆதிசங்கரருக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. ஆதிசங்கரர் சிவபெருமானின் மறு உருவமாக வந்தவர். அம்பாள் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் அம்பாளை பார்த்து செல்ல அம்பாள் பின் வீதி உலா புறப்படுகிறார்.

ஆதி சங்கருடைய பரம்பரை 70-வது பீடாதிபதிதான் இன்னமும் தர்மகர்த்தாவாக இருந்து வருகின்றனர். மேலும் ஆதிசங்கரருக்கு ஆறு மதத்தை தோற்றுவித்தவர் என்று பெயரும் உண்டு. அந்த ஆறு மதம் (ஷண்மதம்) என்பது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கானாபத்யம், சௌரம் என்பனவாகும்.

சைவம்-ஈஸ்வரன், வைணவம்-மகாவிஷ்ணு, சாக்தம்-காளிகாம்பாள், கௌமாரம்-சுப்பிரமணியர், கானாபத்யம்-விநாயகர், சௌரம்-சூரியனர் ஆகும். 
எல்லா மதங்களுக்கும் மூலம் அம்பாள் என்பதற்கு அடையாளமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு ராஜ வீதிக்குள் சைவத்திற்கு கௌசிகேஸ்வரர் கோயிலையும், வைணவத்திற்கு உலகளந்த பெருமாள் கோவிலையும், சாக்தத்திற்கு காளிகாம்பாள் கோவிலையும், கௌமாரத்திற்கு குமர கோட்ட முருகர் கோவிலையும், காணாபாத்யத்திற்கு சங்குபாணி விநாயகர் கோவிலையும், சௌரத்திற்கு மகா காளேஸ்வரர் கோவிலிலுள்ள சூரியனின் சன்னிதியையும் உள்ளது. 

ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடம் அடைந்தார் என்பதற்காக அவருடைய திருஉருவ சிலையும், சன்னிதியும் கோவிலில் அமைந்துள்ளது. 

#துண்டீர #மகாராஜா : 

துண்டீர மகாராஜா காஞ்சிபுரத்தை ஆண்டு வந்தார். ஆகவே காஞ்சி பிராந்தியத்திற்கு தொண்டை மண்டலம் என்று பெயர். அவர் அம்பாளை பிரார்த்திக்க அம்பாள் சொர்ணமழை பெய்ய செய்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் உர்ச்சவர் சன்னிதிக்கு எதிரில் அவர் சிலை உள்ளது. 

#திருக்குளமும், #பெருமாள் #சன்னதியும்: 

திருக்குளத்திற்கு பஞ்ச கங்கை என்று பெயர். ஈஸ்வரனின் தலை முடியிலிருந்து உற்பத்தியாவதால் பஞ்ச கங்கை என்று பெயர்பெற்றது. இந்த திருக்குளத்தில் ஆண் பூதம், பெண் பூதம் என இரண்டு பூதங்கள் பக்தர்களை இம்சித்து வந்தது. இதைப்பார்த்த அம்பாள் இந்த பூதங்களை வதம் செய்தார். 

வதம் செய்தபோது பூதத்திலிருந்து வந்த ரத்தத்திலிருந்து பல பூதங்கள் தோன்றின. இதை பார்த்த மகாவிஷ்ணு அந்த பூதங்களின் மீது நின்றும், படுத்தும், இருந்தும் வதம் செய்தார். திருக்குளம் அருகே பெருமாள் நின்ற, இருந்த, படுத்த கோலத்தில் சன்னதி உள்ளது (திருக்குளம் அருகில் உள்ளது)

பங்குனி உத்திரம் நேரத்தில் 3 நாட்கள் அம்பாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

#பூஜை #முறைகள் : 

துர்வாச முனிவர் எழுதிய சௌபாக்ய சிந்தாமணி எனும் புத்தகத்தின் அடிப்படையில்தான் இங்கு அம்பாளுக்கு பூஜைகள், உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு பூஜைகளை ஏழு பிரிவுகளை (கோத்திரங்களை) சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூஜை செய்ய முடியும். வைதீக முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. (பள்ளி அறைக்கு எதிரில் துர்வாசர் சன்னதி உள்ளது)

#பைரவர் : 

வெளிபிரகாரத்தில் கோபுரத்திற்கு அருகில் பைரவர் சன்னதி உள்ளது. கோவிலின் காவல் தெய்வம் பைரவர் ஆவார். கோவிலின் முடிவு பூஜை பைரவருக்குதான் நடத்தப்படுகிறது. அவருக்கு பூஜை முடிந்ததும் சாவிக்கொத்தை பைரவர் சன்னதியில் வைத்து எடுத்துச்செல்வார்கள். பைரவர் பரமேஸ்வரரின் அவதாரம் ஆவார். 

#விஷேச #தினங்கள் : 

காமாட்சி அம்பாளுக்கு நவராத்திரி 9 நாட்களும் மிகவும் உகந்த விஷேச தினங்களாகும். இதனை சாரதா நவராத்திரி என்று அழைப்பார்கள். யாகசாலை பூஜை உண்டு. பகலில் நவாவரண பூஜையும் உண்டு. இந்த நவாவரண பூஜை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு நடத்தப்படுகிறது. 

மாசி மாதத்தில் பிரம்ம உர்ச்சவம் நடைபெறும். காலை மாலை இரண்டு வேளைகளிலும் அம்பாள் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்க அருள்பாலிக்கிறார் .ஐப்பசி பூரம் அம்பாள் அவதரித்த நாள் ஆகும். பிலாகாசனத்திலிருந்து அம்பாள் வாயு வடிவமாக அவதரித்த நாள் ஐப்பசி பூரம் ஆகும். அன்றும் மிகவும் விஷேச தினமாகும். 

மாசி மகம் அன்று விசுவரூப தரிசனம் மிகவும் விஷேச தினமாகும். பண்டாசுரன் என்ற அரக்கன் எந்த பெரியவர்களாலும் தன்னை அழிக்க கூடாது என்று வரம் பெற்று அனைவரையும் தும்சம் செய்து வந்தான். அப்போது அம்பாள் சிறு பாலகனாக (சிறுமியாக) வந்து அரக்கனை வதம் செய்தாள்.

அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் நீ சிறு பெண்ணாக இருக்கிறாயே யார் நீ? என்று கேட்க அதற்கு சிறுமி மாசி மகம் அன்று வந்து பார். நான் யாரென்று தெரியும் என்று கூறினாள். மாசி மகத்தன்று சிறுமியாக இருந்த அம்பாள் விசுவரூபம் எடுத்து தரிசனம் கொடுத்தாள். ஆகவே அன்று விஷேச தினமாகும். 

#பூஜை #நேரம் : 

காலை 5 மணி முதல் மதியம் 12.30 வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. பிரதி வெள்ளிக்கிழமையும் உர்ச்சவ மூர்த்தி அம்பாள் தங்க தேரில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்திற்குள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சித்தருகிறாள். 

சித்திரை 1-ந் தேதி அன்று தங்க தேரில் நான்கு ராஜ வீதிகளிலும் திருவீதிஉலா வந்து அருள்பாலிக்கிறாள். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான். இந்த தங்கதேரை தர்மகர்த்தாவான ஜெயேந்திரர் மகா பெரியவருக்கு செய்த கனகாபிஷேகத்தில் வந்த தங்க காசுகளை வைத்து உருவாக்கினார். 

#ஸதல #விருட்சம் : 

சம்பக விருட்சம் ஆகும். தற்போது வில்வமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. இத்தனை சிறப்பு மிக்க சாந்த சொரூபியான அம்பாளை நாளும் தரிசித்து துன்பம் நீங்கி வாழ்வில் இன்பம் கண்டு வாழலாம். 

#போக்குவரத்து #வசதி : 

சென்னையில் இருந்து #காஞ்சிபுரம் செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.

Saturday, June 12, 2021

SRI vidya upasana

ஶ்ரீசித்பராசக்தி மஹிமை:

ஶ்ரீவித்யோபாஸனை ஒரு பார்வை 8:

ஶ்ரீவித்யோபாஸனையானது ஸகல ஸாஸ்த்ரங்களிலும் விளங்கும் தன்மையை சிந்தித்தோம்!! ஸாதாரணமாக தற்காலத்தில் ஶ்ரீவித்யை என்றால் பாலையோ அல்லது பஞ்சதசியோ ஷோடஷியோ உபதேசம் பெற்றுக்கொண்டு உபாஸிப்பது என்று வழக்கமாக உள்ளது.

வாஸ்தவமாக ஶ்ரீவித்யை என்பது ஒரு மணி நேர ஜபத்திலோ அல்லது மூன்று மணி நேர ஆவரண பூஜையிலோ மட்டும் முடிந்துவிடக்கூடிய விஷயம் இல்லை. ஶ்ரீவித்யை என்பதே ஒரு வாழ்க்கை முறை. SrividyA is a way of life.

தனது வாழ்நாளை முழுவதும் ஶ்ரீவித்யோபாஸனைக்கு அர்ப்பணம் செய்யும் மஹாத்மாக்களால் மட்டுமே ஶ்ரீவித்யையின் தாத்பர்யத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள இயலும். 

ஶ்ரீவித்யோபாஸகனின் நித்ய கர்மா மிகவும் கடினம். மிகச்சமீபமாக அத்தனை உபாஸனா க்ரமங்களையும் வழுவாமல் செய்து வாழ்ந்த மஹாத்மா தாடேபள்ளி ஶ்ரீராகவநாராயண ஸாஸ்த்ரிகளே. அவர் ஸாக்ஷாத் அம்பாளாகவே வாழ்ந்தவர். தனது கரம் பட்ட க்ஷணத்திலேயே குண்டலினியை எழுப்பக்கூடிய சக்தி பொருந்தியவர். கடும் ஆசாரசீலர். பரம வைதீகர். பவானியை ப்ரத்யக்ஷமாய்க் கண்டவர். 

காலை எழுந்ததும் படுக்கையிலேயே பராசக்தியின் "திவ்யமங்களா த்யானம்" எனும் மஹாத்யானத்தைச் செய்து, பின் ரச்மி மாலா மந்த்ரங்களை ஜபித்து, பின்னரே படுக்கையை விட்டு எழவேணும். பின்னர் பல்துலக்க வேப்பங்குச்சியோ அல்லது ஆலங்குச்சியோ கொண்டு அதை மந்த்ரத்தால் அபிமந்த்ரித்து பின் பல்துலக்கி, ஸ்நாநம் செய்து, வேஷ்டி(புடைவை) ஜலத்தை பிழிய வேண்டிய மந்த்ரத்தை ஜபித்து, பின் பிழிந்து உலர்த்த வேணும்.

பின் மடி கட்டிக்கொண்டு வைதீக ஸந்த்யா பூர்த்தி செய்து, தாந்த்ரீக ஸந்த்யாவந்தனத்தில் காலை வாக்பவேச்வரியை, மதியம் காமராஜேச்வரியை, ஸாயங்காலம் அம்ருதேச்வரியை, இராக்காலம் ஸமஷ்டி மூர்த்தியை த்யானித்து, நான்கு ஸந்த்யைகளையும் பூர்த்தி செய்ய வேணும்.

காலை ஸந்த்யா பூர்த்தியான பிறகு, தனக்குபதேசமான மஹாமந்த்ரங்களை ஜபித்து, பரதேவதைக்கு அர்ப்பணம் செய்ய வேணும். பின்னர் ஷட் பாராயணங்களில் அந்தந்த தின/திதிக்கு ஏற்றாப்போல பாராயணங்களைச் செய்ய வேணும்.

பிறகு ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமா, ஶ்ரீஆம்னாய ஸ்தோத்ரம், ஶ்ரீத்ரிபுராம்பா ஸ்தவராஜம், ஶ்ரீதேவீ கட்கமாலை(ஸுத்த சக்தி மாலை), ஶ்ரீலலிதா த்ரிசதி முதலியவைகளை மிக அவச்யமாக பாராயணம் செய்ய வேணும். இவை ஒரு உபாஸகனுக்கு இன்றியமையாதவை. நித்யமும் அவச்யமாக பாராயணம் செய்ய வேண்டியவை. சாப்பிடுவது, தூங்குவது போல இது நித்ய கடமை.

பின்னர் நேரமிருந்தால் ஶ்ரீஸர்வபூர்த்திகரி, ஶ்ரீகாமாக்ஷி பஞ்சசதி முதலியவைகளைச் செய்யலாம்.

நித்ய நவாவரண பூஜை விஸ்தாரம் இல்லாதே போனாலும் லகு நவாவரணம் உத்தம பக்ஷம். மத்யம பக்ஷத்தில் பஞ்சபர்வாக்களான அமாவாஸ்யை, பௌர்ணமி, க்ருஷ்ண பக்ஷத்து அஷ்டமி, நவமி, சதுர்தசி திதிகளிலாவது மிக அவச்யமாக செய்ய வேணும், அதம பக்ஷம் பௌர்ணமாஸ்யையிலாவது மிக அவச்யமாக செய்ய வேணும்.

ஒரு ஶ்ரீவித்யோபாஸகனில் நித்யபடி கர்மா இங்கே சுருக்கி சொல்லப்பட்டது. முக்யமாக ஸதா ஸர்வதா ஶ்ரீவித்யாம்பாளான ஶ்ரீமஹாகாமேச்வரி ஸஹித ஶ்ரீகாமேச்வர த்யானத்திலும், அஜபா ஜபத்திலும் மூழ்கி இருக்க வேணும். அஹமித்யேவ விபாவயே பவானீம் எனும் பாவனையை அவலம்பிக்க முயற்சிக்க வேணும்.

தொடர்ந்து சிந்திப்போம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்

-- மயிலாடுதுறை ராகவன்