ஶ்ரீகாமாக்ஷி நாம பாராயணம்:
பரதேவதையின் நாமகோசங்களிலே ஸர்வோத்க்ருஷ்டமான மஹா நாமம் "காமாக்ஷி" என்பதாம். ஸகல தேவதைகளாலும் உபாஸிக்கத் தகுந்ததும், ருஷிக்கூட்டங்களாலும் ஸேவிக்கப்படக்கூடியதும், பராசக்தியினுடைய அபாரமான மஹிமையை அடக்கியதுமான மஹாமந்த்ரமே காமாக்ஷி எனும் நாமம்.
அங்கந்யாஸ கரந்யாஸாதிகளோடே ப்ரணவத்தையும், தேவியின் ஏகாக்ஷரத்தையும், மத்யத்தில் "காமாக்ஷி" எனும் நாமத்தையும் முடிவில் நம: எனும் பதத்தையும் சேர்த்து குருமுகமாயப் பெற்றுக்கொண்டு உபாஸிப்பது மஹான்களுக்கும் மங்களத்தை உண்டு செய்யக்கூடியது. த்ரிமூர்த்திகளும் கூட இங்ஙனம் பரதேவதையின் மஹாமந்த்ரத்தினை உபாஸிக்கின்றனர் என்பது ஸௌபாக்யலக்ஷ்மி கல்பம் செப்பும் அற்புதமான விஷயம்.
ஸ்வயமாகவே ஶ்ரீவித்யா மஹாமந்த்ரத்திற்கு ஒப்பான மஹாமந்த்ரமிது!! எனில், உபாஸனை இல்லாதோருக்கு எளிய வழி!!
பரதேவதையின் "காமாக்ஷி" எனும் நாமாவை மறுபடி மறுபடி கூறுவதே!! காமாக்ஷி நாமத்திற்கு மேலே வேறொன்றுமில்லை. ஸகல ஸௌபாக்யங்களை அடைவதற்கும், கைவல்ய மோக்ஷத்தைப் பெறுவதற்கும் மிகச்சிறந்த வழி காமாக்ஷி நாம பாராயணம் ஒன்றே!!
லோக க்ஷேமத்திற்காகவும், நமது க்ஷேமத்திற்காகவும், கொடிய மஹாமாரியான கொரோணா போன்ற நோயக்ளால் பாதிப்புகள் ஏற்படாமல் விளங்க அனைவரும் சேர்ந்து பராம்பிகையின் நாமத்தை பாராயணம் செய்வோம்!! த்ரிமூர்த்திகளாலும் ஜபிக்கப்படக்கூடியதான மஹோத்தமமான மஹாநாமத்தை நாமும் பாராயணம் செய்து ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் கடாக்ஷத்திற்கு பாத்திரர்கள் ஆவோம்!!